Asianet News TamilAsianet News Tamil

ரிஷப் பண்ட் உறுதியா வேணாம்.. டிகே தான் சரியான ஆளு!! லட்சுமணன் தேர்வு செய்த உலக கோப்பைக்கான இந்திய அணி

எஞ்சிய 2 வீரர்களுக்குத்தான் கடும் போட்டி. அந்த 2 இடங்களுக்கு பல முன்னாள் வீரர்களும் தங்களது கருத்தை தெரிவித்து வீரர்களை தேர்வு செய்துவருகின்றனர்.

vvs laxman picks 15 members indian squad for world cup
Author
India, First Published Mar 4, 2019, 11:31 AM IST

உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், அதற்கான இந்திய அணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 

ரோஹித் சர்மா, தவான், கோலி, ராயுடு, கேதர், தோனி, ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி, குல்தீப், சாஹல் ஆகிய 12 வீரர்களும் உறுதி. மாற்று தொடக்க வீரராக கேஎல் ராகுல் அணியில் இணைவதும் உறுதி. 

மாற்று விக்கெட் கீப்பர் உட்பட இரண்டு இடங்களுக்கு யார் தேர்வாகப் போகிறார்கள் என்பதுதான் இன்னும் முடிவாகவில்லை. தோனி முதன்மை விக்கெட் கீப்பராக உள்ளார். ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் ரிஷப் பண்ட் அணியில் யார் அணியில் எடுக்கப்படுவார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. 

vvs laxman picks 15 members indian squad for world cup

உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடரான ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தினேஷ் கார்த்திக் அணியில் எடுக்கப்படவில்லை. ரிஷப் பண்ட் தான் ஒருநாள் அணியில் எடுக்கப்பட்டார். இதன்மூலம் தினேஷ் கார்த்திக்கிற்கு உலக கோப்பை அணியில் இடமில்லை என்பதை மறைமுகமாக தெரிவித்தது தேர்வுக்குழு. 

அதேநேரத்தில் ரிஷப் பண்ட் அணியில் எடுக்கப்படுவதும் உறுதியல்ல. தினேஷ் கார்த்திக்கை விட அவருக்கு கூடுதல் வாய்ப்புகள் உள்ளன, அவ்வளவுதான். உலக கோப்பைக்கு முன்பாக ரிஷப் பண்ட்டுக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்படும் என கேப்டன் கோலி தெரிவித்திருந்தார். கேப்டன் கோலியின் கூற்றும் முக்கியத்துவம் வாய்ந்தது. அவர் கூறியதன் அடிப்படையில், ரிஷப் உலக கோப்பை அணியில் எடுக்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதை பறைசாற்றியது.

vvs laxman picks 15 members indian squad for world cup

ஆனால் ரிஷப் பண்ட் டி20 தொடரில் சரியாக ஆடவில்லை. அதுமட்டுமல்லாமல் ரிஷப் பண்ட் இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால சிறந்த வீரர்களில் ஒருவராக இருந்தாலும், உலக கோப்பையில் ஆடுமளவிற்கு அனுபவமும் பக்குவமும் அவருக்கு போதாது என கங்குலி ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தார். 

உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், முன்னாள் வீரர்கள் பலரும் 15 வீரர்களை கொண்ட இந்திய அணியை தேர்வு செய்துவருகின்றனர். அந்த வகையில் முன்னாள் ஜாம்பவான் விவிஎஸ் லட்சுமணன், 15 வீரர்களை கொண்ட அணியை தேர்வு செய்துள்ளார். 

vvs laxman picks 15 members indian squad for world cup

லட்சுமணன், தினேஷ் கார்த்திக்கைத்தான் மாற்று விக்கெட் கீப்பராக தேர்வு செய்துள்ளார். ரோஹித், தவான், கோலி, ராயுடு, தோனி, கேதர், ஹர்திக், புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி, குல்தீப், சாஹல் ஆகிய 12 வீரர்களும் அணியில் இடம்பெறுவது உறுதி. எஞ்சிய மூன்று வீரர்களில் மாற்று தொடக்க வீரர் ராகுல் இடம்பெறுவதும் உறுதிதான். 

எஞ்சிய 2 வீரர்களுக்குத்தான் கடும் போட்டி. அந்த 2 இடங்களுக்கு பல முன்னாள் வீரர்களும் தங்களது கருத்தை தெரிவித்து வீரர்களை தேர்வு செய்துவருகின்றனர். அந்த இரண்டு இடங்களை தினேஷ் கார்த்திக் மற்றும் இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது ஆகிய இருவரையும் வைத்து நிரப்பியுள்ளார் லட்சுமணன். 

vvs laxman picks 15 members indian squad for world cup

கலீல் அகமதுவை உலக கோப்பை அணியில் எடுக்கும் எண்ணம் ஆரம்பத்தில் தேர்வுக்குழுவிற்கு இருந்தது. அதற்காக அவருக்கு சில வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் தனது வேகத்தில் கலீல் அகமது மிரட்டவில்லை. அவரது பந்துவீச்சில் வேகம் இல்லை. அதனால் எதிரணி பேட்ஸ்மேன்கள் கலீலின் பவுலிங்கை அடித்து ஆடுகின்றனர். அதனால் அவரை உலக கோப்பையில் எடுக்கும் எண்ணத்தை கைவிட்ட தேர்வுக்குழு, அப்படியே கழட்டிவிட்டது. 

இந்நிலையில், கலீல் அகமதுவை தான் தேர்வு செய்த அணியில் எடுத்துள்ளார்  லட்சுமணன். 

vvs laxman picks 15 members indian squad for world cup

லட்சுமணன் தேர்வு செய்த 15 வீரர்களை கொண்ட உலக கோப்பைக்கான இந்திய அணி:

ரோஹித், தவான், கோலி(கேப்டன்), ராயுடு, தோனி(விக்கெட் கீப்பர்), கேதர், ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி, குல்தீப், சாஹல், கேஎல் ராகுல், தினேஷ் கார்த்திக், கலீல் அகமது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios