டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் கண்டிப்பாக ஆட வேண்டும் என்று விவிஎஸ் லக்‌ஷ்மண் கருத்து தெரிவித்துள்ளார். 

டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் - நவம்பரில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கவுள்ளது. இந்தியாவில் நடக்கவிருந்த டி20 உலக கோப்பை தொடர், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்திய அணி டி20 உலக கோப்பைக்கு முன்பாக கடைசியாக நடக்கும் டி20 தொடர் இலங்கைக்கு எதிரானதுதான். இலங்கைக்கு எதிராக ஷிகர் தவான் தலைமையில் ஆடும் இந்திய அணியில் இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற அந்த இளம் வீரர்கள் இந்த தொடரை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

உள்நாட்டு போட்டிகள், இந்தியா ஏ அணிக்காக நீண்டகாலமாக சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவுக்கு டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற நல்ல வாய்ப்பு இது. எனவே இலங்கை தொடரில் அவர் சிறப்பாக ஆடியாக வேண்டும்.

இதுகுறித்து பேசியுள்ள விவிஎஸ் லக்‌ஷ்மண், இது சூர்யகுமார் யாதவுக்கு அருமையான வாய்ப்பு. இலங்கைக்கு எதிரான 6 போட்டிகளிலும் அவர் ஆட வேண்டும். டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் கண்டிப்பாக இடம்பெற வேண்டிய வீரர் சூர்யகுமார் யாதவ் என்று லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.