Asianet News TamilAsianet News Tamil

IPL 2021 பசித்தால் சாப்பாடு சாப்பிடுங்க.. பந்தை தின்காதீங்கடா..! சன்ரைசர்ஸை செமயா விளாசிய சேவாக்

டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் மந்தமான பேட்டிங்கை மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார் வீரேந்திர சேவாக்.
 

virender sehwag brutally criticize sunrisers hyderabad slow batting against delhi capitals in ipl 2021
Author
Dubai - United Arab Emirates, First Published Sep 23, 2021, 9:07 PM IST

இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனான வீரேந்திர சேவாக், அவர் கிரிக்கெட் ஆடியபோது எப்படி அதிரடியாக ஆடி ரசிகர்களை எண்டர்டெய்ன் செய்தாரோ, அதேபோலவே அண்மைக்காலமாக சமூக வலைதளங்களில் கிண்டலான வீடியோக்களையும் கருத்துகளையும் வெளியிட்டு ரசிகர்களை எண்டர்டெய்ன் செய்துவருகிறார்.

விருகிரி என்ற பெயரில் வீடியோக்களை வெளியிட்டுவரும் சேவாக், ஐபிஎல் போட்டிகள், வீரர்களின் ஆட்டம், போட்டியின் முடிவு, கணிப்புகள் ஆகியவற்றை கிண்டலாக தனக்கே உரிய பாணியில் வெளியிட்டுவருகிறார்.

அந்தவகையில், டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் மந்தமான பேட்டிங்கை மிகக்கடுமையாக சாடியுள்ளார் சேவாக்.

டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவரில் 134 ரன்கள் மட்டுமே அடித்தது. 135 ரன்கள் என்ற இலக்கை எளிதாக அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது டெல்லி அணி.

சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் மந்தமாக பேட்டிங் ஆடியதே அந்த அணி குறைவான ஸ்கோர் அடித்ததற்கு காரணம். வார்னர் 3 பந்தில் ரன்னே அடிக்காமல் ஆட்டமிழந்தார். ரிதிமான் சஹா 17 பந்தில் 18 ரன்களும், கேப்டன் கேன் வில்லியம்சன் 26 பந்தில் 18 ரன்களும் அடித்தனர். மனீஷ் பாண்டே 16 பந்தில் 17 ரன்கள் மட்டுமே அடித்தார். கேதர் ஜாதவ் 8 பந்தில் 3 ரன் தான் அடித்தார். அப்துல் சமாத் ஓரளவிற்கு நன்றாக ஆடி 21 பந்தில் 28 ரன்கள் அடித்தார். அப்துல் சமாத் மற்றும் ரஷீத் கான்(19 பந்தில் 22 ரன்) ஆகிய இருவரின் ஓரளவு பொறுப்பான பேட்டிங்கால் தான் 20 ஓவரில் 134 ரன்களையாவது எட்டியது சன்ரைசர்ஸ் அணி.

இந்நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர்கள் பந்துகளை அதிக தின்றதை சாடியுள்ளார் சேவாக். பசித்தால் சாப்பாடு சாப்பாடுங்க.. பந்தை திங்காதீங்க என்று மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார் சேவாக்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios