மொஹாலியில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி 149 ரன்கள் அடித்தது. 150 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, விராட் கோலியின் அதிரடி அரைசதம் மற்றும் தவானின் பொறுப்பான பேட்டிங்கால், 19வது ஓவரிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் என இரண்டிலுமே அபாரமாக செயல்பட்டார் கோலி. இது ஒன்றும் புதிதல்ல. ஆனாலும் அதை தொடர்ந்து செய்து கொண்டிருப்பது தான் கோலியின் ஸ்பெஷாலிட்டி. பேட்டிங்கில் 72 ரன்களை விளாசி மீண்டும் ஒருமுறை இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார் கோலி. 

தென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங்கின்போது அபாரமான ஒரு கேட்ச்சையும் பிடித்தார். தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான குயிண்டன் டி காக் அபாரமாக ஆடி அரைசதம் அடித்து தென்னாப்பிரிக்க அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். ஆனால் அரைசதம் அடித்த அவர் பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. அரைசதம் அடித்த மாத்திரத்திலேயே நவ்தீப் சைனியின் பந்தை தூக்கியடிக்க, மிட் ஆஃப் திசையில் அதிவேகமாக ஓடிவந்த விராட் கோலி, பந்திலிருந்து கொஞ்சம் தூரமாக இருக்க, கடைசி நொடியில் டைமிங் மிஸ் ஆகாமல் ஜம்ப் செய்து ஒற்றை கையில் அந்த கேட்ச்சை பிடித்தார். கோலியின் அபாரமான அந்த கேட்ச்சின் வீடியோ இதோ..