அதுமுதலே கோலிக்கும் ரோஹித்துக்கும் இடையே பனிப்போர் நடந்துவருகிறது. இருவருமே வெளியே காட்டிக்கொள்ளாமல் இருந்தாலும் இந்த பனிப்போர் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என்பதை அண்மை சம்பவம் ஒன்று மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்திய அணியில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் டாப் 2 வீரர்களாக திகழும் கோலிக்கும் ரோஹித்துக்கும் இடையே வெளியே தெரியாமல் பனிப்போர் நடந்துகொண்டே தான் இருக்கிறது.
பேட்டிங்கில் மட்டுமல்லாமல் கேப்டன்சியிலும் கோலிக்கு செம டஃப் கொடுத்துவருகிறார் ரோஹித் சர்மா. கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் தன்னை நிரூபித்து காட்டி கோலிக்கு தலைவலியை ஏற்படுத்துகிறார் ரோஹித். இருவருக்கும் இடையேயான பனிப்போர் ஆரம்பித்தது ஆசிய கோப்பை தொடருக்கு பிறகுதான்.

பொதுவாகவே விராட் கோலியின் கேப்டன்சியின் மீது சில விமர்சனங்கள் உண்டு. பவுலிங் சுழற்சி, வீரர்களை பயன்படுத்தும் விதம், கள வியூகம் ஆகியவை குறித்த விமர்சனங்கள் உண்டு. ஆனால் சமீபத்தில் அவரது கேப்டன்சி மேம்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது. ஆனால் கேப்டன்சியை பொறுத்தமட்டில் கோலியைவிட ரோஹித் சர்மா சிறப்பாகவே செயல்படுகிறார்.
விராட் கோலி இல்லாத நேரங்களில் ரோஹித் சர்மா அணியை சிறப்பாக வழிநடத்தி வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். தொடர்ந்து அந்த பணியை செய்தும் வருகிறார். வீரர்களை கையாளும் விதம், கள வியூகம் ஆகியவற்றில் ரோஹித் சர்மா சிறப்பாகவே செயல்படுகிறார். அதுமட்டுமல்லாமல், நெருக்கடியான சூழல்களிலும் அந்த அழுத்தத்தை வீரர்கள் மீது திணிக்காமல் நிதானமாக கையாள்கிறார்.

ஆசிய கோப்பையை வென்ற சமயத்தில் ரோஹித் சர்மாவின் கேப்டன்சியை கவாஸ்கர், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், லட்சுமணன் போன்ற முன்னாள் ஜாம்பவான்கள் வெகுவாக பாராட்டினர். கோலிக்கு மிகவும் நெருக்கமான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் ரோஹித்தின் கேப்டன்சியை பாராட்டியிருந்தார். அந்த சமயத்தில் ரோஹித் சர்மா, தனது பேட்டியின் மூலம் பரபரப்பை ஏற்படுத்தினார். அதாவது நிரந்தர கேப்டனாக தன்னை நியமித்தால் அதை ஏற்றுக்கொண்டு சிறப்பாக செயல்பட தயாராக இருப்பதாக கூறி பரபரப்பை கிளப்பினார்.

அதுமுதலே கோலிக்கும் ரோஹித்துக்கும் இடையே பனிப்போர் நடந்துவருகிறது. வெளியே காட்டிக்கொள்ளா விட்டாலும் இந்த பனிப்போர் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதனால் ரோஹித் சர்மா துணை கேப்டனாக இருந்தாலும் அவரது ஆலோசனை எனக்கு தேவையே இல்லை என்பதுபோல அவரை கோலி புறக்கணித்துவருகிறார். அதை சில சமயங்களில் பார்க்க முடியும்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டி20 போட்டியில் இக்கட்டான சூழலில் பவுலர் பும்ராவுடனான ஆலோசனையில் கலந்துகொள்ள வந்த ரோஹித் சர்மாவை புறக்கணிக்கும் விதமாக பும்ராவிடம் ஆலோசனையை கூறிவிட்டு நகர்ந்தார் கோலி. கோலி மற்றும் பும்ரா ஆகிய இருவருமே அருகில் ரோஹித் சர்மா நிற்பதை கொஞ்சம்கூட பொருட்படுத்தவில்லை. ஒரு மரியாதைக்குக்கூட அவரது கருத்தை கேட்கவில்லை. இந்த சம்பவம் ரோஹித் சர்மாவை கோலி புறக்கணிப்பதை பட்டவர்த்தனப்படுத்தியது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
Funny Cricket Memes
Yesterday this made me sad 😪😥😥
உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், கோலியின் இப்படியான போக்கு நல்லதல்ல. ரோஹித் சர்மாவின் அறிவையும் ஆலோசனையையும் பயன்படுத்தி கொள்வதே அணிக்கும் கேப்டன் கோலிக்கும் நல்லது. அதை கோலி புரிந்துகொண்டு செயல்பட்டால் நல்லது.
