Asianet News TamilAsianet News Tamil

கோலி தான் கேப்டன்.. அவர மாத்துறதுக்குலாம் சான்ஸே இல்ல

ஒரு கேப்டன், அணியின் நலனுக்கு முன்னுரிமை கொடுக்காமல், தனது நோக்கத்திற்கு செயல்பட்டு விட்டு, அது எடுபடாமல் போனதற்கு பின்னர், தனது செயல்பாடுகளை நியாயப்படுத்த முயல்வது எந்த வகையிலும் அணிக்கு நல்லதல்ல.

virat kohli will be continued as team indias captain says report
Author
India, First Published Jul 19, 2019, 10:29 AM IST

உலக கோப்பை தோல்வியை அடுத்து இந்திய ஒருநாள் அணியின் கேப்டன்சி மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. உலக கோப்பை தோல்வி மட்டுமே இதற்கு காரணமில்லை.

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்பட்ட இந்திய  அணி, அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக 240 ரன்கள் என்ற இலக்கைக்கூட எட்டமுடியாமல் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று தொடரை விட்டு வெளியேறியது. 

இந்த தோல்வி பல கேள்விகளையும் அதிருப்திகளையும் அணி நிர்வாகத்தின் மீது ஏற்படுத்தியது. இந்திய அணி பொதுவாகவே டாப் ஆர்டர்களையே அதிகமாக சார்ந்திருக்கிறது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரும்பாலும் நன்றாக ஆடிவிடுவதால் மிடில் ஆர்டர் சிக்கல் இந்திய அணிக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் இருந்தது. ஆனால் அரையிறுதி போட்டியில் டாப் ஆர்டர்கள் சோபிக்காத நிலையில், மிடில் ஆர்டரின் லெட்சணம் தெரிந்துவிட்டது. 

virat kohli will be continued as team indias captain says report

இதை வெறும் மிடில் ஆர்டர் சிக்கல் என்று மட்டுமே பார்க்கமுடியாது. ஏனெனில் யுவராஜ் சிங்கை ஓரங்கட்டிய பிறகு மிடில் ஆர்டர் சிக்கல் இருந்தது அனைவருக்குமே தெரியும். நான்காம் வரிசை வீரருக்கான நீண்ட தேடுதல் படலம் நடந்தது. உலக கோப்பையை மனதில்வைத்து அணியை கட்டமைக்கும் முழு உரிமையையும் சுதந்திரத்தையும் கேப்டன் கோலியும் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் பெற்றிருந்தனர். 

ஆனாலும் அவர்களால், 2 ஆண்டுகால தேடுதல் படலத்திற்கு பிறகும் சரியான மற்றும் தகுதியான 4ம் வரிசை வீரரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கு, நல்ல வீரர்கள் இல்லை என்பது காரணமல்ல. அணியின் நலன் கருதி நடுநிலையோடு செயல்பட்டு சிறந்த வீரரை அடையாளம் கண்டு இவர்களால் தேர்வு செய்ய முடியவில்லை என்பதே உண்மை. 

virat kohli will be continued as team indias captain says report

ஏனெனில் ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர் என எத்தனையோ சிறந்த வீரர்கள் இருந்தும்கூட அணி நிர்வாகமும் கேப்டனும் இவர்களை கண்டுகொள்ளாமல் புறக்கணித்தது. கடைசியாக இந்திய அணியின் நான்காம் வீரர் இவர் தான் என்று கேப்டன் கோலியால் அங்கீகரிக்கப்பட்ட ராயுடுவும் உலக கோப்பை அணியில் கழட்டிவிடப்பட்டார். 

இவ்வாறு ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுத்து, அணியை கட்டமைப்பதற்கு பதிலாக அந்தந்த நேரத்திற்கு தேவையானதை செய்துகொண்டே இருந்தது அணி நிர்வாகம். அதன் விளைவுதான் உலக கோப்பை தோல்வி. 

virat kohli will be continued as team indias captain says report

இது ஒருபுறமிருக்க, உலக கோப்பை தோல்விக்கு பின்னர், அணியில் இரண்டு கேங் இருப்பதும், அந்த கேங் பிரச்னை அணி தேர்வில் எதிரொலித்ததும் தெரியவந்தது. அணியின் சீனியர் வீரரும் துணை கேப்டனுமான ரோஹித் சர்மாவின் ஆலோசனையை பெறாமல் கேப்டன் கோலியும் ரவி சாஸ்திரியும் தன்னிச்சையாக செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ரோஹித் பரிந்துரைக்கும் வீரர்களை வேண்டுமென்றே ஓரங்கட்டிவிட்டு, தனது விசுவாசிகளான ராகுல், சாஹல் ஆகியோர் சரியாக ஆடாவிட்டாலும் கூட கேப்டன் கோலி அனைத்து போட்டிகளிலும் ஆடவைக்கிறார் என்ற கருத்து வெளிவந்தது. 

virat kohli will be continued as team indias captain says report

ஒரு கேப்டன், அணியின் நலனுக்கு முன்னுரிமை கொடுக்காமல், தனது நோக்கத்திற்கு செயல்பட்டு விட்டு, அது எடுபடாமல் போனதற்கு பின்னர், தனது செயல்பாடுகளை நியாயப்படுத்த முயல்வது எந்த வகையிலும் அணிக்கு நல்லதல்ல. தவறிழைத்தால் அதை ஒத்துக்கொண்டு அடுத்த முறை நிகழாமல் பார்த்துக்கொள்வதுதான் நல்ல அணுகுமுறை. ஆனால் ஒவ்வொரு முறையும் செய்த தவறை நியாயப்படுத்துவது சரியான அணுகுமுறை அல்ல. 

கோலியின் இதுபோன்ற அணுகுமுறைகளால் கேப்டனை மாற்ற வேண்டும் என்ற குரல்கள் வலுத்தன. அடுத்த உலக கோப்பையை மனதில் வைத்து, அணியில் இருக்கும் சில சிக்கல்களை கலைந்து அவற்றிற்கெல்லாம் தீர்வு கண்டு வலுவான அணியை கட்டமைப்பதற்கு ரோஹித்தே சரியான நபர். எனவே ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்பதற்கு இதுவே சரியான தருணம் என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியது. 

virat kohli will be continued as team indias captain says report

ரோஹித் சர்மா ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்தி 4 முறை கோப்பையை வென்றுகொடுத்தார். இந்திய அணியின் கேப்டனாக செயல்படும் வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் தனது கேப்டன்சி திறனை காட்டியுள்ளார். அதனால் ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. 

பிசிசிஐ, ரோஹித்தை கேப்டனாக நியமிக்க விரும்புவதாக தகவல் வெளியான நிலையில், அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. விராட் கோலியே தொடர்ந்து மூன்றுவிதமான அணிகளுக்கும் கேப்டனாக செயல்படுவதற்கே வாய்ப்புள்ளது என்றும், ரோஹித் - கோலி தலைமையில் இரண்டு கேங்குகள் இருப்பதாக பரவிய தகவலில் உண்மையில்லை என்றும் பிசிசிஐ சார்பில் அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளிவந்ததாக ஒரு தகவல் உள்ளது. அந்தவகையில் விராட் கோலியே கேப்டனாக தொடர்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios