Asianet News TamilAsianet News Tamil

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்தும் விலகினார் விராட் கோலி!கோலியின் திடீர் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்தும் விராட் கோலி விலகியுள்ளார்.
 

virat kohli steps down from india test captaincy
Author
Chennai, First Published Jan 15, 2022, 8:57 PM IST

டி20 உலக கோப்பையுடன் இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகிய விராட் கோலி, ஒருநாள் அணியிலிருந்து கேப்டன்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

டெஸ்ட் அணியின் கேப்டனாக மட்டும் நீடித்த விராட் கோலி, இப்போது டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்தும் விலகியுள்ளார். 

2014ம் ஆண்டிலிருந்து இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்துவந்த விராட் கோலியின் கேப்டன்சியில் இந்திய அணி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் சிறப்பாக விளையாடி வெற்றிகளை குவித்தது. கோலி தலைமையிலான இந்திய அணி தான் வெளிநாடுகளில் ஆதிக்கம் செலுத்தி ஆடி வெற்றிகளை குவித்தது.

ஆஸ்திரேலிய மண்ணில் கோலி தலைமையில் முதல் முறையாக 2018-2019 சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது. கோலி தலைமையில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டுவந்தது. முதல் முறையாக நடத்தப்பட்ட ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வரை சென்ற இந்திய அணி, ஃபைனலில் தோற்று கோப்பையை இழந்தது.

டெஸ்ட் அணியை சிறப்பாக வழிநடத்திவந்தார் கோலி. இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோற்றது. இந்த தொடரில் முதல் முறையாக தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல இந்திய அணிக்கு வாய்ப்பிருந்தும், அனுபவமற்ற தென்னாப்பிரிக்க அணியிடம் இந்திய அணி தோற்றது. அதற்கு மோசமான பேட்டிங் தான் காரணம்.

மேலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில் ஸ்டம்ப் மைக்கில் கோலி பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியதோடு, கோலி மீது கடும் விமர்சனங்களையும் எழுப்பியது.

இந்நிலையில், டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்தும் விலகுவதாக கோலி திடீரென அறிவித்துள்ளார். கோலியின் அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2014ம் ஆண்டிலிருந்து இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்துவந்த கோலி, டெஸ்ட் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்திருக்கிறார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios