பாத்து பாத்து செதுக்கிய வீடு – நீச்சல் குளம், கார்டனிங், ஆடம்பரமான சொகுசு பங்களா – வீடியோ வெளியிட்ட கோலி!

விராட் கோலி மும்பையில் கட்டி வந்த சொகுசு பங்களா வீட்டை ரசிகர்களுக்கு வீடியோ வெளியிட்டு காண்பித்துள்ளார்.

Virat Kohli Shares his Alibaug Dream House which is built for his family rsk

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்ற 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்றது. இதில், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. பார்படாஸில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 17 ஆண்டுகளுக்கு பிறகு 2ஆவது முறையாக டிராபியை வென்றது.

குழந்தைகளுடன் லண்டனில் செட்டிலா? வதந்திகளுக்கு மத்தியில் முதல் புகைப்படத்தை பகிர்ந்த அனுஷ்கா சர்மா!

இந்த தொடரில் விராட் கோலி முதல் 7 போட்டிகளில் 6 இன்னிங்ஸில் 75 ரன்கள் எடுத்தார். கடைசியாக இறுதிப் போட்டியில் 76 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்தார். இதையடுத்து மும்பையில் நடைபெற்ற வெற்றி அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கடைசியாக டிராபி கைப்பற்றி சாம்பியனான இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. அதன் பிறகு அவசர அவசரமாக லண்டன் புறப்பட்டுச் சென்றார். லண்டனில் அனுஷ்கா சர்மா தனது மகள் வாமிகா மற்றும் அகாய் ஆகியோருடன் வசித்து வருகிறார். அவர்களை பார்ப்பதற்காக லண்டன் சென்றுள்ளார்.

டி20 WC டிராபி வென்ற கையோடு சர்ச்சையில் சிக்கிய ரோகித் சர்மா: ஆளாளுக்கு வரிந்து கட்டி வரும் ரசிகர்கள்!

இந்த நிலையில் தான் விராட் கோலி மும்பையில் அலிபாக் பகுதியில் புதிதாக கட்டி வந்த சொகுசு பங்களா வேலைகள் நிறைவடைந்துள்ளது. அந்த வீட்டை ரசிகர்களுக்கு காண்பிக்கும் விராட் கோலியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு மாசத்தில் ஆரம்பித்து 3 மாதம், 6 மாதம், 8 மாசம் மற்றும் 12 மாதம் என்று ஒரு வருட பயணத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார். இந்த புதிய வீடு குறித்து விராட் கோலி கூறியிருப்பதாவது: இந்த பயணம் ஒரு தடையற்ற பயணமாக இருந்தது. எங்களது கனவு இல்லத்தை நனவாக்கிய அவாஸ் குழுவிற்கு நன்றி. இந்த புதிய வீட்டில் எனது அன்புக்குரியவர்களுடன் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவிக்க என்னால் காத்திருக்க முடியாது என்று கூறியுள்ளார்.

இதன் மூலமாக விராட் கோலி தனது குடும்பத்துடன் லண்டனில் குடியேற போகிறார் என்ற செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. எனினும், தற்போது விராட் கோலி, அனுஷ்கா சர்மா ஆகியோர் லண்டனில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Olympics 2024: ஒலிம்பிக் 2024 தொடக்க விழாவில் மூவர்ணக் கொடியை ஏந்தி அணிவகுப்பு நடத்தும் பிவி சிந்து!

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios