இந்திய அணியின் கேப்டனும் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனுமான விராட் கோலி, உள்ளாடையுடன் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்து அதிர்ச்சியளித்துள்ளார். 

உலக கோப்பையை வெல்ல முடியாமல் அரையிறுதியுடன் திரும்பிய இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய மூன்று தொடர்களிலும் அந்த அணியை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் அடைந்த வெற்றியின் மூலம், நம்பரின் அடிப்படையில் இந்திய டெஸ்ட் அணியின் வெற்றிகரமான கேப்டன் என்ற பெருமையை கோலி பெற்றார். 48 டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டு அதில் 28 போட்டிகளில் வெற்றியை தேடிக்கொடுத்ததன் மூலம் இந்திய அணிக்கு அதிகமான டெஸ்ட் போட்டிகளில் வெற்றியை தேடிக்கொடுத்த கேப்டன் என்ற மைல்கல்லை எட்டினார். இதற்கு முன்னர் 27 வெற்றிகளை பெற்றுக்கொடுத்த தோனிதான் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்தார். 

வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்த நிலையில், அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுடன் தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி ஆடவுள்ளது. தென்னாப்பிரிக்க அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்து இந்த தொடரில் ஆடவுள்ளது. வரும் 15ம் தேதி இந்த தொடர் தொடங்குகிறது. 

இந்நிலையில், விராட் கோலி உள்ளாடையுடன் இருக்கும் புகைப்படைத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, நமக்குள் இருப்பதை நாம் உன்னித்து கவனிக்கும் வரையில், வெளியிலிருந்து எதையும் தேட தேவையில்லை என்று பதிவிட்டுள்ளார். 

இதை எதற்காக கோலி பதிவிட்டுள்ளார் என்று தெரியவில்லை. இதுகுறித்து அடுத்த பதிவை கோலி விரைவில் பதிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் நடிக்கும் விளம்பரத்திற்கான விளம்பரமாகக்கூட இது இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. ஆனாலும் கோலி இப்படியொரு புகைப்படத்தை எதற்கு பதிவிட்டார் என்பது தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். மேலும் பலவிதமான கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர்.