Asianet News TamilAsianet News Tamil

Victory Parade: பும்ரா இந்திய அணியின் அதிர்ஷ்டம், பொக்கிஷமாக அறிவிக்க கையெழுத்திட ரெடி – விராட் கோலி பாராட்டு!

வான்கடே மைதானத்தில் நடைபெற்ற உலக சாம்பியன்ஸ் வெற்றி கொண்டாட்டத்தின் போது பேசிய விராட் கோலி இந்திய அணியின் அதிர்ஷ்டம் ஜஸ்ப்ரித் பும்ரா என்று பாராட்டு தெரிவித்தார்.

Virat Kohli Share his Emotional Feeling about T20 WC Trophy and Said that Jasprit Bumrah is a once in a generation bowler rsk
Author
First Published Jul 5, 2024, 9:57 AM IST | Last Updated Jul 5, 2024, 10:04 AM IST

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் இந்திய அணி 7 ரன்க வித்தியாசத்தில் வெற்றி பெற்று டிராபியை வென்றது. இதைத் தொடர்ந்து பார்படாஸில் ஏற்பட்ட பெரில் சூறாவளி தாக்கம் காரணமாக இந்திய அணி 4 நாட்களுக்கு பிறகு நேற்று டெல்லி வந்தது. முதலில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றது. அதன் பிறகு மும்பை வந்த இந்திய அணி வீரர்கள் வெற்றி அணிவகுப்பு நிகழ்ச்சியில் திறந்தவெளி பேருந்தில் ஊர்வலம் வந்தனர். அப்போது மெரைன் டிரைவ் முதல் வான்கடே வரையில் லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடி இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

டி20 உலகக் கோப்பை டிராபி வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகையை வழங்கிய பிசிசிஐ!

இதையடுத்து வான்கடே மைதானம் வந்தனர். அப்போது நடைபெற்ற பாராட்டு விழாவில் ரோகித் சர்மா, விராட் கோலி, ராகுல் டிராவிட், பும்ரா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது பேசிய விராட் கோலி கூறியிருப்பதாவது: கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக நானும், ரோக்டிஹ் சர்மாவும் ஐசிசி டிராபி வெல்ல முயற்சித்து வந்தோம். அதிலேயும் டி20 டிராபியை வென்றிட வேண்டும் என்பதில் குறிக்கோளாக இருந்தோம். டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு பிறகு டிரெஸிங் ரூமிற்கு சென்ற போது அழுது கொண்டே சென்றேன். அதே போன்று ரோகித் சர்மாவும் அழுது கொண்டே வந்து என்னை கட்டியணைத்தார். அந்த தருணத்தை என்னால் மறக்க முடியாது. இத்தனை ஆண்டுகளில் ஒரு நாள் கூட ரோகித் சர்மாவை இப்படி எமோஷனலாக பார்த்தது கூட இல்லை. அதே போன்று தான் ஜஸ்ப்ரித் பும்ரா ஒரு தலைமுறைக்கான பவுலர்.

இந்த டிராபி ஒட்டுமொத்த தேசத்திற்கு சொந்தமானது – இந்த அணியை வழிநடத்த நான் ரொம்பவே அதிர்ஷ்டசாலி – ரோகித் சர்மா!

பும்ரா இந்திய அணிக்காக விளையாடுவது என்பது அதிர்ஷ்டம். எப்போதெலாம் இந்திய அணி போட்டியில் பின் தங்கியிருக்கிறதோ அப்போதெல்லாம் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்திருக்கிறார். இது ஒவ்வொரு போட்டியிலும் நடந்திருக்கிறது. அப்போது தொகுப்பாளரான கவுரவ் கபூர், பும்ராவை நாட்டின் பொக்கிஷமாக அறிவிக்க கோரி மனு எழுத யோசிக்கிறேன். அதில் நீங்கள் கையெழுத்திடுவீர்களா என்று விராட் கோலியிடம் கேட்கவே, உடனடியாக கையெழுத்தி போடுகிறேன் என்று கூறியிருக்கிறார்.

நண்பர்கள், குடும்பத்தினர் உடன் இணைந்து ரோகித் சர்மாவை தலையில் தூக்கி வச்சு கொண்டாடிய திலக் வர்மா- Watch Video!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios