ஆஸ்திரேலியாவில் விராட் கோலி வலைப்பயிற்சியில் செம டச்சில் அருமையான ஷாட்டுகளை ஆடிய வீடியோ வைரலாகிவருகிறது.

ஆஸ்திரேலியாவிற்கு சென்றுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதல் ஒருநாள் போட்டி நாளை சிட்னியில் நடக்கிறது.

ஐபிஎல் முடிந்த கையோடு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு சென்றுவிட்ட இந்திய வீரர்கள், அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்திய வீரர்கள் பயிற்சி செய்யும் வீடியோக்களை பிசிசிஐயும் வீரர்களும் பகிர்ந்துவருகின்றனர். அவை வைரலாகின்றன.

அந்தவகையில், ஐபிஎல்லில் ஃபார்மில் இல்லாமல் சரியாக ஆடாத விராட் கோலி, ஆஸ்திரேலியாவில் வலைப்பயிற்சியில் பெரிய ஷாட்டுகளை தெளிவாக ஆடி அசத்தினார். கோலி செம டச்சில் அருமையாக ஆடியது, இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் நம்பிக்கையளிக்கும் விதமாகவும், ஆஸ்திரேலிய அணிக்கு பீதியளிக்கும் விதமாகவும் அமைந்துள்ளது.