Asianet News TamilAsianet News Tamil

#AUSvsIND ரோஹித் ஃபிட்னெஸ் குறித்து எனக்கே தெளிவா தெரியல; குழப்பமாத்தான் இருக்கு..! கோலி அதிரடி

ரோஹித் சர்மாவின் காயம் மற்றும் ஃபிட்னெஸ் குறித்து தனக்கே தெளிவு இல்லை என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
 

virat kohli opens up on rohit sharma injury and fitness update ahead of first odi against australia
Author
Sydney NSW, First Published Nov 26, 2020, 9:20 PM IST

இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள நிலையில், 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இந்த சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணி ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டபோது, ரோஹித் சர்மா பெயர் இடம்பெறவில்லை. ஐபிஎல்லில் தொடைப்பகுதியில் காயம் அடைந்ததால் அவரது பெயர் இல்லை.

பின்னர் டெஸ்ட் அணியில் மட்டும் ரோஹித் சர்மா சேர்க்கப்பட்டிருந்தார். அதனால் அவர் காயத்திலிருந்து மீண்டு உடற்தகுதி பெற்றுவிட்டார் என்று நினைக்கப்பட்ட நிலையில், ஆனால் இந்திய வீரர்களுடன் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நேரடியாக ஆஸ்திரேலியாவிற்கு செல்லாமல்  பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று அங்கு பயிற்சியில் ஈடுபட்டுவரும் நிலையில், ரோஹித் சர்மா முதல் டெஸ்ட் போட்டிக்கு முன் உடற்தகுதி பெறுவது சந்தேகம் என்பதால், அவர் முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான அணியிலிருந்தும் நீக்கப்பட்டார்.

ரோஹித் சர்மாவின் காயம் என்ன மாதிரியான காயம் என்பது சஸ்பென்ஸாகவே உள்ளது. நாளை இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி நடக்கவுள்ள நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் விராட் கோலி, ரோஹித் எங்களுடன் ஆஸ்திரேலியாவிற்கு ஏன் வரவில்லை என்ற தகவல் கிடைக்கவில்லை. ரோஹித் தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருக்கிறார் என்பது மட்டுமே அதிகாரப்பூர்வமாக நாங்கள் பெற்ற தகவல். டிசம்பர் 11ம் தேதி அவரது உடற்தகுதி மறுபடியும் பரிசோதிக்கப்படுகிறது.

முதல் தேர்வுக்குழு மீட்டிங் தொடங்கி, ஐபிஎல் முடிந்ததுவரை, கடைசி ஈமெயில் என எதிலுமே தெளிவான தகவல் இல்லை. ரோஹித்தின் காயம் மற்றும் உடற்தகுதி குறித்த தெளிவே இல்லை; குழப்பமாகவே இருக்கிறது என்று கோலி தெரிவித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios