IPL 2023: என்ன ஷாட்-ரா இது..? அஷ்வினின் அதிர்ஷ்ட பவுண்டரியை கண்டு அடக்கமுடியாமல் சிரித்த கோலி..! வைரல் வீடியோ

ஆர்சிபி - ராஜஸ்தான் ராயல்ஸ் இடையேயான போட்டியில் ரவிச்சந்திரன் அஷ்வின் அடித்த ஒரு வித்தியாசமான ஷாட்டை கண்டு, இக்கட்டான கட்டத்தில் ஆட்டம் இருந்தாலும் கூட, விராட் கோலி அடக்க முடியாமல் சிரித்தார். அந்த வீடியோ வைரலாகிவருகிறது.
 

virat kohli laughed at ravichandran ashwin bizarre shot boundary during rcb vs rr match in ipl 2023 video goes viral

ஐபிஎல் 16வது சீசனில் ஆர்சிபி - ராஜஸ்தான் ராயல்ஸ் இடையேயான போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். 

முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர் விராட் கோலி டக் அவுட்டானாலும், அதன்பின்னர் டுப்ளெசிஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகிய இருவரும் இணைந்து அதிரடியாக பேட்டிங் ஆடி இருவருமே அரைசதம் அடித்து 3வது விக்கெட்டுக்கு 117 ரன்களை குவித்தனர். டுப்ளெசிஸ் 39 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 62 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, மேக்ஸ்வெல் 44 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 77 ரன்களை குவித்து 15வது ஓவரில் ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் ஆட்டமிழந்த பின் கடைசி 5 ஓவரில் ஆர்சிபி 33 ரன்கள் மட்டுமே அடித்ததால்  ஆர்சிபியால் 200 ரன்களை எட்டமுடியாமல் 189 ரன்கள் தான் அடித்தது. 

IPL 2023: ஐபிஎல்லில் அடிச்ச அடி வீண் போகல.. இந்திய அணியில் இடம்பிடிக்கும் மும்பை இந்தியன்ஸ் வீரர்..!

190 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பட்லர் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். ஆனால் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் தேவ்தத் படிக்கல்லும் இணைந்து அதிரடியாக ஆடி 2வது விக்கெட்டுக்கு 98 ரன்களை குவித்தனர். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த தேவ்தத் படிக்கல் 34 பந்தில் 52 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் கேப்டன் சஞ்சு சாம்சன் 22 ரன்களுக்கும் ஷிம்ரான் ஹெட்மயர் 3 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, ஆட்டம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கையை விட்டுச்சென்றது. அதன்பின்னர் த்ருவ் ஜோரெல் 16 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 34 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் நின்றாலும் கூட, அவரால் இலக்கை எட்ட முடியவில்லை. கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரில் 12 ரன்கள் மட்டுமே அடித்து 7 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. 

கடைசி ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி ஓவரை ஹர்ஷல் படேல் வீச, அந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட அஷ்வின், ஷாட் அடிக்க ஓங்கி பின்னர் பேட்டை அப்படியே நிறுத்திவிட்டார். பந்து பேட்டில் அடித்து எட்ஜ் ஆகி கீப்பர் தலைக்கு மேல் பின்பக்கம் சென்று பவுண்டரி ஆனது. அஷ்வின் அடிக்க முயன்றது வேறு;நடந்தது வேறு. அதிர்ஷ்டத்தால் பவுண்டரியான அந்த ஷாட்டை கண்டு, ஆட்டம் இக்கட்டான நிலையில் இருந்தபோது விராட் கோலி சிரித்தார். அந்த வீடியோ வைரலாகிவருகிறது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios