பேட்டிங்கில் அபாரமாக ஆடி போட்டிக்கு போட்டி ஏதாவது ஒரு சாதனையை முறியடித்து வரும் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். 

பேட்டிங்கில் மட்டுமல்லாமல், கேப்டன்சியிலும் சாதனைகளை படைத்துவருகிறார். இந்திய அணிக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டனாக வலம்வரும் விராட் கோலி, பேட்டிங் மற்றும் கேப்டன்சியில் மட்டும் சாதனைகளை குவிக்கவில்லை. ஃபீல்டிங்கிலும் புதிய மைல்கல்லை எட்டிவருகிறார். 

Also Read - இந்திய அணி பேட்டிங்கில் படுசொதப்பல்.. அணிக்கு பயனே இல்லாத மொக்கை இன்னிங்ஸை ஆடிய தவான்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்துவரும் முதல் ஒருநாள் போட்டியில் ஒரு கேட்ச் பிடித்தால், ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடித்துவிடுவார். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக கேட்ச்களை பிடித்த இந்திய ஃபீல்டர்களில் முதலிடத்தில் 156 கேட்ச்களுடன் அசாருதீன் உள்ளார். இரண்டாமிடத்தில் சச்சின் டெண்டுல்கர்(140 கேட்ச்கள்) உள்ளார். 

Also Read - ரோஹித் பேட்டிங் ஆடுனா நான் டிவியை விட்டு நகரவே மாட்டேன்.. பாகிஸ்தான் லெஜண்ட் புகழாரம்

மூன்றாமிடத்தில் 124 கேட்ச்களுடன் ராகுல் டிராவிட்டும் கோலியும் உள்ளனர். கோலியும் 124 கேட்ச்களை இதுவரை பிடித்துள்ளார். இந்த போட்டியில் இன்னும் ஒரு கேட்ச் பிடித்தால், ராகுல் டிராவிட்டை பின்னுக்குத்தள்ளி மூன்றாமிடத்தை கோலி பிடித்துவிடுவார். கோலியின் கெரியர் முடிவதற்குள் அசாருதீன் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது