இந்திய அணி ஒரே காலக்கட்டத்தில் ரோஹித் சர்மா - விராட் கோலி என்ற இருபெரும் பேட்ஸ்மேன்களை பெற்றிருப்பது அணிக்கு மிகப்பெரிய பாக்கியம். சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்து ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி, தனது பேட்டிங்கை தீவிரமான கடும் பயிற்சியின் மூலம் மேம்படுத்தியவர். ஆனால் ரோஹித் சர்மாவோ மிகச்சிறந்த பேட்டிங் டெக்னிக்கின் மூலம் அசாத்தியமான ஷாட்டுகளைக்கூட அசால்ட்டாக ஆடக்கூடியவர். 

Also Read - ஸ்டம்ப்புகளை கழட்டி எறியும் பும்ரா, சைனி.. ஆஸ்திரேலிய வீரர்களே ஆட்டத்துக்கு முன்னாடி இந்த வீடியோவை பார்த்துராதீங்க

களத்தில் நிலைத்துவிட்டால், ரோஹித் சர்மாவின் பேட்டிங் வேற லெவலில் இருக்கும். அவரை ஆரம்பத்திலேயே வீழ்த்தினால்தான் உண்டு. இல்லையெனில் பெரிய இன்னிங்ஸை ஆடி அசாத்திய ஸ்கோரை அடித்துவிடுவார். சதத்தை எட்டிவிட்டால் அதன்பின்னர் ருத்ரதாண்டவம் ஆடிவிடுவார். தனது பலத்தை அறிந்ததால்தான், அவரால் 3 இரட்டை சதங்களை ஒருநாள் போட்டியில் அடிக்க முடிந்தது. ஒருநாள் கிரிக்கெட்டில்ம் 264 ரன்கள் என்ற அதிகபட்ச ஸ்கோரை அடித்ததுடன், 3 இரட்டை சதங்களை விளாசி, இனிமேல் முறியடிப்பதற்கு சாத்தியமில்லாத சாதனையை படைத்துள்ளார். 

ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அசத்திவந்த ரோஹித் சர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டிலும் முத்திரை பதித்து தற்போது நிரந்தர இடத்தை பிடித்துவிட்டார். ரோஹித் சர்மா அசால்ட்டாக சிக்ஸர்களை விளாசக்கூடியவர். அனைத்து ஷாட்டுகளையும் எந்தவித சிரமமுமில்லாமல் எளிதாக அடிக்கக்கூடிய வகையிலான பேட்டிங் டெக்னிக்கையும் ஸ்டைலையும் கொண்டவர் ரோஹித் சர்மா. 

Also Read - ஆஸ்திரேலிய அணியை அலறியடித்து ஓடவிடப்போகும் 11 இந்திய வீரர்கள் இவங்கதான்

ரோஹித் சர்மா கிரிக்கெட் ரசிகர்களுக்கு அப்பாற்பட்டு பல முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்களும் கூட ரசிகர்கள் தான். அப்படியான ரசிகர்களில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் அப்பாஸும் ஒருவர். அதை அவரே தெரிவித்துள்ளார். ரோஹித் சர்மாவை வியந்து புகழ்ந்துள்ளார் ஜாகீர் அப்பாஸ்.

ரோஹித் சர்மா குறித்துன் பேசியுள்ள ஜாகீர் அப்பாஸ், ரோஹித் சர்மா பேட்டிங் ஆடினால் நான் டிவியை விட்டு நகரவே மாட்டேன். அவரது பேட்டிங் எனக்கு முழு திரும்ப்தியளிக்கும். ரோஹித்தின் பேட்டிங்கை பார்க்க பேரின்பமாக இருக்கும். அவர் ஆடும் ஷாட்டுகள் எனக்கு வியப்பளிக்கும். பந்தை விட்டு ஆடமாட்டார், பந்து அவரிடம் வருவதற்குள்ளாக விரைவாகவே பந்தை பிக்கப் செய்து அடித்துவிடுவார் என்று ரோஹித்தின் பேட்டிங்கை வியந்து புகழ்ந்துள்ளார் ஜாகீர் அப்பாஸ்.