Asianet News TamilAsianet News Tamil

விராட் கோலி சதம்.. ரஹானே அரைசதம்.. வலுவான நிலையில் இந்தியா.. அடுத்த செசன் தான் ரொம்ப முக்கியம்

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மயன்க் அகர்வாலை தொடர்ந்து கேப்டன் விராட் கோலியும் சதமடித்துள்ளார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து சிறப்பாக ஆடிவரும் ரஹானேவும் அரைசதம் கடந்துவிட்டார். 
 

virat kohli hits century and rahane scores half century in second test
Author
Pune, First Published Oct 11, 2019, 11:38 AM IST

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக ஆடி ஸ்கோரை உயர்த்திவருகின்றனர். ரோஹித் சர்மா 14 ரன்களில் ஆட்டமிழக்க, மயன்க் அகர்வால் அபாரமாக ஆடி சதமடித்தார். 

ஆடுகளம் ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு சாதகமாக இருந்ததால், பந்து எக்ஸ்ட்ரா பவுன்ஸ் ஆனது. ஆனால் அவற்றையெல்லாம் திறமையாக சமாளித்து ஆடிய மயன்க் அகர்வால், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தை விளாசினார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய புஜாரா, அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் கேப்டன் கோலியும் துணை கேப்டன் ரஹானேவும் இணைந்து முதல் நாள் ஆட்டத்தை முடித்தனர். கோலி அரைசதம் அடித்திருந்த நிலையில், நேற்றைய ஆட்டம் முடிந்தது. கோலி 63 ரன்களுடனும் ரஹானே 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணி முதல் நாள் ஆட்டமுடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் அடித்திருந்தது. 

virat kohli hits century and rahane scores half century in second test

இரண்டாம் நாள் ஆட்டத்தை கோலியும் ரஹானேவும் தொடர்ந்தனர். இருவரும் இணைந்து தங்களது அனுபவத்தை பயன்படுத்தி, ரபாடா, நோர்ட்ஜே ஆகிய இருவரின் மிரட்டலான ஃபாஸ்ட் பவுலிங்கை திறம்பட எதிர்கொண்டு ஆடினர். ரஹானே அரைசதம் அடித்தார். அதைத்தொடர்ந்து கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 26வது சதத்தை பூர்த்தி செய்தார். 

virat kohli hits century and rahane scores half century in second test

இந்திய அணி இரண்டாம் நாளான இன்றைய உணவு இடைவேளை வரை 3 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்கள் அடித்து வலுவான நிலையில் உள்ளது. உணவு இடைவேளை முடிந்தபிறகு, இரண்டாவது செசனில் முடிந்தவரை அடித்து ஆடி ஸ்கோரை உயர்த்திவிட்டு இந்திய அணி இன்று மாலை டிக்ளேர் செய்யும். அதனால் அடுத்த செசனில், இந்திய வீரர்கள் அதிரடியாக ஸ்கோரை உயர்த்தவே பார்ப்பார்கள். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios