Pran Pratishtha: கிரிக்கெட்டும் முக்கியம், ராமர் கோயில் திறப்பு விழாவும் முக்கியம் – அயோத்தி வந்த விராட் கோலி!

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று பிரம்மாண்டமாக நடைபெற உள்ள நிலையில், ராமர் கோவில் சிலை பிரதிஷ்டை விழாவில் கலந்து கொள்ள இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி வருகை தந்துள்ளார்.

Virat Kohli have Reached Ayodhya for the Pran Pratishtha of Lord Rama in Ram Temple, video goes viral rsk

அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற உள்ள பிராணா பிரதிஷ்டா விழாவில் ஆசியாவின் கோடீஸ்வரர்களான முகேஷ் அம்பானி உள்பட 8,000 முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.

மேலும், கிரிக்கெட் பிரபலங்களான சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா, கபில்தேவ், அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட், ஹர்மன்ப்ரீத் கவுர், மிதாலி ராஜ், ரவிச்சந்திரன் அஸ்வின் என்று கிரிக்கெட் பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த மகா கும்பாஷேகத்தின் முக்கிய சடங்குகளை வாரணாசியின் பிரதான பூசாரி லக்ஷ்மி காந்த் தீட்சித் செய்ய உள்ளார்.

இதையொட்டி நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் குவிந்துள்ளனர். அயோத்தி நகரமே வண்ண மின் விளக்குகள் மற்றும் மலர் அலங்காரங்களால் ஜொலிக்கிறது. இன்று காலை 10 மணிக்கு மங்கல இசையுடன் மகா கும்பாபிஷேக விழா தொடங்குகிறது.

இந்த நிலையில் தான் இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள வருகை தந்துள்ளார். அவர் காரில் அயோத்தி வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 25 ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது. இதற்காக நேற்று ஹைதராபாத் புறப்பட்டு வந்த விராட் கோலி இன்று அயோத்திக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக கேப்டவுனில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியின் போது ஒலிக்கப்பட்ட ராம் சியா ராம் என்ற பாடலுக்கு விராட் கோலி ஸ்ரீ ராமரைப் போன்று போஸ் கொடுத்திருந்தார். இது தோடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி காலை 10.55 மணிக்கு கோயில் வளாகத்திற்கு வருகை தர உள்ளார். காலை 11.30 மணிக்கு சிறப்பு பூஜைகள் தொடங்கும். பின்னர் 12.05 முதல் 12.55 மணிக்குள் ராமர் சிலை பிரதிஷ்டை விழா நடைபெறும். இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

அதே போல் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்ற உள்ளனர். திறப்பு விழா முடிந்த பிறகு நாளை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

நாடு முழுவதும் இந்த சிலை பிரதிஷ்டை விழாவை நேரலையில் காணவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. டிடி நியூஸ் மற்றும் டிடி நேஷனல் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும். யூ டியூபிலும் அயோத்தி கும்பாபிஷேக விழாவை நேரலையில் பார்க்கலாம். காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஒட்டுமொத்த நிகழ்வுகளும் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் உள்ள பல்வேறு இந்திய தூதரகங்கள் மற்றும் தூதரகங்களில் ஒளிபரப்பப்படும். குறிப்பாக இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, மொரிசியஸ் உள்ளிட்ட 50 நாடுகளில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா ஒளிபரப்பப்பட உள்ளது. இதே போல் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் அயோத்தி விழா ஒளிபரப்பப்படும்.

முன்னதாக இந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 7 நாள் சடங்குகள் கடந்த 16-ம் தேதி தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக கடந்த வியாழக்கிழமை குழந்தை ராமரின் சிலை கோவில் கருவறைக்குள் வைக்கப்பட்டது. இந்த சிலையை கர்நாடகாவை சேர்ந்த சிற்பி வடிவமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios