Asianet News TamilAsianet News Tamil

India vs South Africa: Virat Kohli: 49ஆவது சதம் – 35ஆவது பிறந்தநாளில் சச்சின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான உலகக் கோப்பை 37ஆவது லீக் போட்டியில் விராட் கோலி 49ஆவது சதம் அடித்து தனது பிறந்தநாளன்று இந்த அற்புத சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

Virat Kohli has created history on his 35th birthday after hitting his 49th ODI Century during IND vs SA 37th World Cup Match at Eden Gardens Kolkata rsk
Author
First Published Nov 5, 2023, 6:36 PM IST

தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா இடையிலான 37ஆவது லீக் போட்டி தற்போது கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், தொடக்க வீரர் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 40 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில், 6 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அதன் பிறகு மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் 23 ரன்களில் கேசவ் மஹாராஜ் பந்தில் கிளீன் போல்டானார்.

IND vs SA: HBD Virat Kohli: ஷ்ரேயாஸ் ஐயர், விராட் கோலியின் பொறுப்பான ஆட்டம் – இந்தியா 326 ரன்கள் குவிப்பு!

இதையடுத்து விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் இணைந்து நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். விராட் கோலி அரைசதம் அடித்து அதனை சதத்திற்கு கொண்டு சென்றார். ஒருபுறம் அதிரடியாக விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் 77 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த கேஎல் ராகுல் பெரிதாக ஒன்றும் சோபிக்கவில்லை. அவர் 8 ரன்களில் வெளியேறினார்.

அதன் பிறகு சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். சூர்யகுமார் மற்றும் கோலி இருவரும் நிதானமாக ரன்கள் சேர்த்தனர். ஆனால், சூர்யகுமார் யாதவ் 22 ரன்களில் வெளியேறினார். இவரைத் தொடர்ந்து விராட் கோலியுடன் ரவீந்திர ஜடேஜா களமிறங்கினார். இந்த நிலையில் தான் விராட் கோலி 3 போட்டிகளுக்கு பிறகு 4ஆவது போட்டியில் 49ஆவது சதம் அடித்துள்ளார். இதற்கு வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் தனது 48ஆவது சதத்தை பூர்த்தி செய்த விராட் கோலி அதன் பிறகு 95, 0 மற்றும் 88 ரன்களில் ஆட்டமிழந்தார்.

விராட் கோலிக்கு அவுட் தர மறுத்த நடுவர்: டிஆர்எஸ்க்கு சென்ற தென் ஆப்பிரிக்கா அப்புறம் என்ன நடந்தது?

இந்த நிலையில் தான் தனது 35ஆவது பிறந்தநாளான இன்று ஒரு நாள் போட்டிகளில் 49ஆவது சதம் அடித்து சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் சாதனையை சமன் செய்துள்ளார். விராட் கோலி 119 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து புதிய சாதனையை உருவாக்கியுள்ளார். அதுவும் 277 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். சச்சின் 452 இன்னிங்ஸ்களில் 49 சதங்கள் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரோகித் சர்மா 31 சதங்களும், ரிக்கி பாண்டிங் 30 சதங்களும் அடித்துள்ளனர்.

மேலும், பிறந்தநாளில் சதம் அடித்தவர்களின் பட்டியலில் விராட் கோலி இணைந்துள்ளார். இதற்கு முன்னதாக நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ராஸ் டெய்லர் 131 ரன்கள் நாட் அவுட் மற்றும் மிட்செல் மார்ஷ் இந்த உலகக் கோப்பையில் தனது பிறந்தநாளில் 121 ரன்கள் எடுத்துள்ளார். இறுதியாக விராட் கோலி தனது 35ஆவது பிறந்தநாளில் சதம் விளாசியுள்ளார்.

IND vs SA: இந்தியாவில் ஒருநாள் போட்டியில் 6000 ரன்களை கடந்த 2ஆவது வீரர் என்ற சாதனை படைத்த விராட் கோலி!

பிறந்தநாளில் சதம் அடித்தவர்கள்:

வினோத் காம்ப்ளி 100* vs இங்கிலாந்து ஜெய்பூர் 1993 (21ஆவது பிறந்தநாள்)

சச்சின் டெண்டுல்கர் 134 vs ஆஸ்திரேலியா, ஷார்ஜா 1998 (25ஆவது பிறந்தநாள்)

சனத் ஜெயசூர்யா 130 vs இந்தியா, கராச்சி 2008 (39 ஆவது பிறந்தநாள் )

ராஸ் டெய்லர் 131* vs பாகிஸ்தான், பல்லேகலே Pallekele 2011 (27 ஆவது பிறந்தநாள்)

டாம் லாதம் 140* vs நெதர்லாந்து, ஹாமில்டன் Hamilton 2022 (30 ஆவது பிறந்தநாள்)

மிட்செல் மார்ஷ் 121 vs பாகிஸ்தான், பெங்களூரு Bengaluru 2023 (32 ஆவது பிறந்தநாள்)

விராட் கோலி 101* vs தென் ஆப்பிரிக்கா கொல்கத்தா 2023 (35 ஆவது பிறந்தநாள்)

பிறந்தநாளில் அரைசதம் அடித்தவர்களின் பட்டியலில் இடம் பிடித்த கிங் கோலி!

இதில், ராஸ் டெய்லர், மிட்செல் மார்ஷ் மற்றும் விராட் கோலி ஆகியோர் உலகக் கோப்பையில் பிறந்தநாளன்று சதம் விளாசி சாதனை படைத்துள்ளனர். கடந்த 2009 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் விராட் கோலி முதல் முறையாக ஒரு நாள் போட்டியில் சதம் விளாசினார். தற்போது அதே மைதானத்தில் தனது 49ஆவது சதத்தை நிறைவு செய்துள்ளார்.

முடி வெட்டிக் கொண்டே நியூசிலாந்து – பாகிஸ்தான் போட்டியை பார்த்த விராட் கோலி!

Follow Us:
Download App:
  • android
  • ios