ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விராட் கோலியின் வழிகாட்டுதல் தனக்கு உதவியாக இருந்தது என்றும், அவர் தான் தனது இன்ஸ்பிரேஷன் என்றும் கூறியுள்ளார்.

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. ரோகித் சர்மா டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்யவே, ஆஸ்திரேலியா முதலில் ஆடியது. இதில், நேற்றைய முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் களத்தில் இருந்தனர்.

ரிக்கி பாண்டிங் சதம் சாதனையை முறியடித்து, இந்தியாவிற்கு எதிராக 2000 ரன்களை கடந்த ஸ்டீவ் ஸ்மித்!

இதையடுத்து இருவரும் 2ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். டிராவிஸ் ஹெட் 163 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில், 25 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் அடங்கும். அடுத்து வந்த கேமரூன் க்ரீன் 6 ரன்களில் வெளியேறினார். இவரைத் தொடர்ந்து வந்த மிட்செல் ஸ்டார்க் 5 ரன்களில் அக்‌ஷர் படேல் மூலமாக ரன் அவுட் செய்யப்பட்டார்.

ஷர்துல் தாக்கூரை எடுத்ததற்கு அவரால் முடிந்ததை செய்துவிட்டார் - 4 நோபால், 75 ரன்!

இந்தப் போட்டியின் 2ஆம் நாள் இன்னிங்ஸ் பிரேக்கின் போது விராட் கோலி, ரோகித் சர்மாவுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அதோடு, வெளிநாட்டில் நடக்கும் போட்டிகளில் எப்படி கேப்டன்ஷி செய்ய வேண்டும், பீல்டிங் செட்டப் எப்படி என்பது குறித்து வழிகாட்டியுள்ளார். அதுமட்டுமின்றி பவுலர்களையும் அவ்வவ்ப்போது மாற்றி மாற்றி வீச வைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளர்.

அவரது வழிகாட்டுதல் தனக்கு பெரிதும் உதவியாக இருந்தது என்றும், அவர் தான் தனது இன்ஸ்பிரேஷன் என்றும் ரோகித் சர்மா கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்னுமே பண்ணமுடியாமல் திணறிய இந்தியா: 47 பவுண்டரி, ஒரு சிக்சர்: முதல் நாளில் 327 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா!

Scroll to load tweet…