கோபத்தின் உச்சத்திற்கே போன விராட்– இப்படி பவுலிங் போட்டால் எப்படி ஜெயிக்கிறது? பவுலர்கள் மீது கோபம்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பேட்டிங் செய்வதைப் பார்த்து கண்ணில் கண்ணீர் வராத குறையாக விராட் கோலி வருத்தமடைந்த புகைப்படமும், பவுலர்களாக கோபமடைந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.
பெங்களூருவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் 30ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 287 ரன்கள் குவித்து புதிய வரலாற்று சாதனை படைத்தது. இதற்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 277/3 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை படைத்திருந்தது.
இந்த சாதனையை பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் முறியடித்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் ஹென்ரிச் கிளாசென் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் எடுத்துக் கொடுத்தனர். ஹெட், 41 பந்துகளில் 8 சிக்ஸ், 9 பவுண்டரி உள்பட 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதே போன்று ஹென்ரிச் கிளாசென் 31 பந்துகளில் 7 சிக்ஸ், 2 பவுண்டரி உள்பட 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசியில் வந்த அப்துல் சமாத் 4 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 37 ரன்களும், எய்டன் மார்க்ரம் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 32 ரன்களும் எடுத்தனர். இறுதியாக 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 287 ரன்கள் குவித்தது.
ஏற்கனவே ஆர்சிபி அணியில் முகமது சிராஜ் பவுலிங் சரியில்லை என்று அவருக்குப் பதிலாக லாக்கி பெர்குசன் அறிமுகம் செய்யப்பட்டார். ஆனால், அவரும் இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகள் கொடுத்து 52 ரன்கள் கொடுத்துள்ளார். மேலும், ரீஸ் டாப்ளே 68 ரன்களும், வைஷாக் விஜயகுமார் 64 ரன்களும், யாஷ் தயாள் 51 ரன்களும் வாரி வழங்கினர்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங் செய்வதை கண்ட விராட் கோலி மைதானத்திலேயே கண்ணீர் மட்டும் சிந்தாமல் மனமுடைந்து நின்ற காட்சி கண்முன்னே வந்து செல்கிறது. மேலும், பவுலர்கள் அதிக ரன்கள் கொடுப்பதைக் கண்டு ஆக்ரோஷமான காட்சி வைரலாகி வருகிறது.
Everyone’s Mental Health after Watching RCB Bowling 🥹#RCBvsSRH #rcbbowlers #ViratKohli #RCB pic.twitter.com/6EPzEuF1PY
— Tanay (@tanay_chawda1) April 15, 2024