IPL 2023: கோலி, ஃபாஃப், மேக்ஸ்வெல் சேர்ந்து LSG பவுலிங்கை அடித்து நொறுக்கி அரைசதம்! கடின இலக்கை நிர்ணயித்த RCB
ஐபிஎல் 16வடு சீசனில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவரில் 212 ரன்களை குவித்து, 213 ரன்கள் என்ற கடின இலக்கை லக்னோ அணிக்கு நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்துவரும் போட்டியில் ஆர்சிபி - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:
கேஎல் ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், க்ருணல் பாண்டியா, நிகோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஜெய்தேவ் உனாத்கத், அமித் மிஷ்ரா, ஆவேஷ் கான், மார்க் உட், ரவி பிஷ்னோய்.
ஆர்சிபி அணி:
விராட் கோலி, ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), மஹிபால் லோம்ரார், க்ளென் மேக்ஸ்வெல், ஷபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அனுஜ் ராவத், டேவிட் வில்லி, வைன் பார்னெல், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்.
முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்கள் ஃபாஃப் டுப்ளெசிஸ் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் இணைந்து அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். விராட் கோலி 44 பந்தில் 61 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 96 ரன்களை குவித்தனர். அதன்பின்னர் டுப்ளெசிஸுடன் ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி அவரும் அரைசதம் அடித்தார். டுப்ளெசிஸ் - மேக்ஸ்வெல் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 116 ரன்களை குவித்தனர்.
2019 vs 2023 ஒருநாள் உலக கோப்பை..! அனைத்து அணிகளின் கேப்டன்களும் மாற்றம்.. கோப்பை யாருக்கு..?
அதிரடியாக ஆடி 29 பந்தில் 6 சிக்ஸர்களை விளாசிய மேக்ஸ்வெல் 59 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். தொடக்க வீரராக இறங்கி அபாரமாக ஆடி 79 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் நின்று இன்னிங்ஸை முடித்து கொடுத்தார். 20 ஓவரில் 212 ரன்களை குவித்த ஆர்சிபி அணி, 213 ரன்கள் என்ற கடின இலக்கை லக்னோ அணிக்கு நிர்ணயித்துள்ளது.