Asianet News TamilAsianet News Tamil

Asia Cup: செம பேட்டிங் சூர்யா.. சூர்யகுமார் யாதவுக்கு தலைவணங்கிய விராட் கோலி..! வைரல் வீடியோ

ஆசிய கோப்பையில் ஹாங்காங் அணிக்கு எதிரான  போட்டியில் அதிரடியாக பேட்டிங் ஆடி 26 பந்தில் 68 ரன்களை குவித்த சூர்யகுமார் யாதவின் பேட்டிங்கை கண்டு வியந்துபோன விராட் கோலி, இன்னிங்ஸுக்கு பின் அவருக்கு தலைவணங்கினார்.  அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
 

virat kohli bows down to surykumar yadav after his spectacular knock against hong kong in asia cup 2022
Author
First Published Sep 1, 2022, 7:54 AM IST

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெற்ற இந்திய அணி, அடுத்த போட்டியில் ஹாங்காங்கை எதிர்கொண்டது. துபாயில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா 13 பந்தில் 21 ரன்கள் அடித்தார். 36 ரன்கள் அடித்த ராகுல் 13வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 96 ரன்கள் ஆகும். விராட் கோலி ஒருமுனையில் நிலைத்து ஆடி சீரான வேகத்தில் ஸ்கோர் செய்து அரைசதம் அடித்தார். ஆனால் 4ம் வரிசையில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் காட்டடி அடித்து மிரட்டிவிட்டார்.

இதையும் படிங்க - Asia Cup: ஹாங்காங்கை எளிதாக வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது இந்தியா

சமகாலத்தின் தலைசிறந்த பவுலர்களையே தெறிக்கவிடுபவர் இந்தியாவின் 360 சூர்யகுமார். ஹாங்காங் பவுலர்களை சும்மா விடுவாரா..? ஹாங்காங் பவுலர்களின் பவுலிங்கை அடி வெளுத்துவாங்கிவிட்டார். பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து அரைசதத்தை எட்டிய சூர்யகுமார் யாதவ், 26 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 68 ரன்களை குவித்தார். அவரது ஸ்டிரைக் ரேட் 261.54 ஆகும். 

17 ஓவரில் இந்திய அணி வெறும் 138 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. அதன்பின்னர் தான் சூர்யகுமார் யாதவ் ருத்ரதாண்டவம் ஆடினார். 18வது ஓவரில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடித்தார். 19வது ஓவரில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடித்த சூர்யகுமார் யாதவ், கடைசி ஓவரில் 4 சிக்ஸர்களை விளாசி செம கெத்தாக முடித்தார்.

இதையும் படிங்க - சூர்யகுமார் யாதவுக்கு முன் என்னை பேட்டிங் ஆட இறக்கிவிட்டதற்கு இதுதான் காரணம்..! ஜடேஜா விளக்கம்

சூர்யகுமார் யாதவின் அபாரமான பேட்டிங்கை  மறுமுனையில் நின்று பார்த்து ரசித்து, வியந்த விராட் கோலி, இன்னிங்ஸுக்கு பின், சூர்யகுமார் யாதவுக்கு தலைவணங்கினார். மிகப்பெரிய ஜாம்பவானான விராட் கோலியையே தலைவணங்க வைத்தது சூர்யகுமார் யாதவின் பேட்டிங்.  கோலி தலைவணங்கிய வீடியோ வைரலாகிவருகிறது.

193 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஹாங்காங் அணியை வெறும் 152 ரன்களுக்கு சுருட்டி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.

Follow Us:
Download App:
  • android
  • ios