3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. கடந்த 12ம் தேதியே ஆஸ்திரேலியாவிற்கு சென்றுவிட்டது.

நவம்பர் 27ம் தேதி முதல் ஒருநாள் போட்டி தொடங்கவுள்ள நிலையில், இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியாவில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். 

இந்திய வீரர்கள் பயிற்சி செய்யும் வீடியோவை பிசிசிஐ டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுவருகிறது. விராட் கோலி ஃபீல்டிங் பயிற்சியின்போது ஒற்றை கையில் கேட்ச் பிடித்த வீடியோ வெளியாகி வைரலானது.

இப்போது, தான் பேட்டிங் பயிற்சி செய்யும் வீடியோவை ஷேர் செய்துள்ள கோலி, டெஸ்ட் பயிற்சி செசனை தான் மிகவும் விரும்புவதாகவும் பதிவிட்டுள்ளார்.

 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மட்டுமே கோலி ஆடுகிறார். குழந்தை பிறக்கவுள்ளதால் கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடாமல் இந்தியாவிற்கு திரும்புகிறார்.