Asianet News TamilAsianet News Tamil

கோலியை ஏமாற்றிய டைஜுலின் ஸ்பின் பவுலிங்..! அவுட்டுனு தெரிந்தும் ஏன் டி.ஆர்.எஸ் எடுத்தீங்க கோலி..? வைரல் வீடியோ

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஸ்டம்ப்புக்கு நேராக வந்த பந்தில் எல்பிடபிள்யூ ஆன விராட் கோலி, நன்றாக அவுட் என்று தெரிந்த அதற்கு டி.ஆர்.எஸ் எடுத்து ரிவியூவை வீணடித்தார். அதை ரசிகர்கள் விமர்சித்துவருகின்றனர்.
 

virat kohli bamboozled by taijul islam and fans criticized him for taking drs for clear out in india vs bangladesh first test
Author
First Published Dec 14, 2022, 4:21 PM IST

இந்தியா - வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆடாததால் கேஎல் ராகுல் கேப்டன்சி செய்கிறார். டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணி:

ஷுப்மன் கில், கேஎல் ராகுல் (கேப்டன்), புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்.

வங்கதேச அணி:

ஜாகிர் ஹசன், நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ, லிட்டன் தாஸ், ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), முஷ்ஃபிகுர் ரஹீம், யாசிர் அலி, நூருல் ஹசன் (விக்கெட் கீப்பர்), மெஹிடி ஹசன் மிராஸ்,  டைஜுல் இஸ்லாம், காலித் அகமது, எபடாட் ஹுசைன்.

ஷிகர் தவானை தூக்கியெறிய துணிந்த பிசிசிஐ..! ரோஹித் கையில் தவான் குடுமி

முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ராகுல்(22) மற்றும் ஷுப்மன் கில் (20) ஆகிய இருவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். விராட் கோலி ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அடித்து ஆடிய ரிஷப் பண்ட் 45 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 46 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று சிறப்பாக ஆடிய புஜாரா அரைசதம் அடிக்க, அவருடன் இணைந்து நன்றாக ஆடிய ஷ்ரேயாஸ் ஐயரும் அரைசதம் அடித்தார். 90 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார் புஜாரா. புஜாரா -ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 149 ரன்களை குவித்தனர். ஷ்ரேயாஸ் ஐயர் சதத்தை நோக்கி ஆடிவருகிறார்.

கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் அடுத்தடுத்த ஓவரில் ஆட்டமிழந்தனர். விராட் கோலி வெறும் ஒரு ரன்னுக்கு டைஜுல் இஸ்லாமின் சுழலில் வீழ்ந்தார். இடது கை ஸ்பின்னரான டைஜுல் இஸ்லாம் ஸ்டம்ப்புக்கு நேராக வீசிய பந்தை கோலி பேக்ஃபூட்டில் ஆட முயன்று தவறவிட்டார். அது கோலியின் கால்காப்பில் பட்டது. விராட் கோலி ஃப்ரண்ட்ஃபூட்டில் ஆடியிருக்கலாம். ஆனால் பேக்ஃபூட்டில் ஆடி எல்பிடபிள்யூ ஆனார். அம்பயர் அதற்கு எல்பிடபிள்யூ அவுட் கொடுக்க, மிடில் ஸ்டம்ப்புக்கு நேராக அதுவும் ஸ்டம்ப்பை ஒட்டி கோலியின் பின் கால் இருந்தது. பின் காலில் தான் பந்து பட்டது. எனவே அது அவுட் என அப்பட்டமாக தெரிந்தது.

அவுட்டாகாமல் இருந்திருந்தால் முச்சதம் அடித்திருப்பேன்..! நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேன் - இஷான் கிஷன்

ஆனால் விராட் கோலி அதை ரிவியூ செய்தார். ரிவியூவிலும் அது அவுட் என்பது உறுதியானது. அதனால் இந்திய அணி ஒரு ரிவியூவை இழந்தது. இவ்வளவு மோசமான ரிவியூ எடுத்ததற்காக விராட் கோலி மீது ரசிகர்கள் டுவிட்டரில் அதிருப்தி தெரிவித்துவருகின்றனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios