கொரோனா ஊரடங்கால் அனைவரும் வீடுகளில் முடங்கியுள்ளனர். கிரிக்கெட் போட்டிகள் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. எனவே கிரிக்கெட் வீரர்களும் வீடுகளில் முடங்கியிருக்கின்றனர். 

வீடுகளில் முடங்கினாலும், ஃபிட்னெஸுடன் இருப்பதற்காக தொடர்ந்து உடற்பயிற்சிகளை செய்துவருகின்றனர். அந்த வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகிக்கொண்டிருக்கின்றன. தோனி தனது வீட்டில் தனது மகளுடன் பைக்கில் ரவுண்டடிப்பது, மனைவி, மகளுடன் செய்யும் சேட்டைகளின் வீடியோ வைரலாகிவருகிறது. 

அதேபோல விராட் கோலிக்கு அனுஷ்கா சர்மா ஊரடங்கு நேரத்தில் முடிவெட்டிய வீடியோவும் வைரலானது. இந்நிலையில், கோலியும் அனுஷ்கா சர்மாவும் கிரிக்கெட் ஆடிய வீடியோ தற்போது வைரலாகிறது. 

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவதற்காக பெரும்பாலான நாட்களை அணியுடனும் வெளிநாட்டிலும் கழிக்கிறார். அதேபோலவே பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவும் சினிமாவில் பிசி. எனவே இருவரும் இணைந்து நேரம் செலவிடுவதே மிகக்குறைவு. அப்படியிருக்கையில், இந்த ஊரடங்கு அவர்களை போன்ற புகழ்பெற்ற ஜோடிகளுக்கு, இணைந்து இருப்பதற்கான வாய்ப்பை வழங்கியிருக்கிறது. 

வீட்டில் இருந்தாலும் சும்மா இருக்க முடியாது.. கிரிக்கெட் ஆடியே தீருவேன் என்று மனைவி அனுஷ்காவுடன் கோலி, மும்பையில் இருக்கும் தங்களது வீட்டில் கிரிக்கெட் ஆடியுள்ளார். கோலி பந்துவீச முதலில் அனுஷ்கா சர்மா பேட்டிங் ஆடுகிறார். பின்னர், பேட்டை ஆர்வத்துடன் வந்து வாங்கி கோலி பேட்டிங் ஆடினார். மனைவிதான் பந்துவீசுகிறார், வீட்டில் தான் பேட்டிங் ஆடப்போகிறார். ஆனாலும் முறையாக க்ளௌசையெல்லாம் மாட்டிக்கொண்டு ஆடிய கோலி, அனுஷ்கா வீசிய பவுன்ஸரை தடுப்பாட்டம் ஆடினார். அந்த வீடியோ இதோ...