Asianet News TamilAsianet News Tamil

அந்த பிரச்னை இருந்தது எல்லாருக்குமே தெரியும்.. ஆனால் இப்போது இல்ல..! விக்ரம் ரத்தோர் அதிரடி

இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் மிடில் ஆர்டருக்கு தீர்வு காணப்பட்டுவிட்டதாக பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கருத்து தெரிவித்துள்ளார்.
 

vikram rathour clarifies about indian team middle order batting
Author
Chennai, First Published Jun 27, 2020, 5:48 PM IST

இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் மிடில் ஆர்டருக்கு தீர்வு காணப்பட்டுவிட்டதாக பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கருத்து தெரிவித்துள்ளார்.

யுவராஜ் சிங்கிற்கு பிறகு அவரது இடத்தை நிரப்ப சரியான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கிடைக்காமல் இந்திய அணி, 2 ஆண்டுகளாக தவித்துவந்த நிலையில், இந்திய அணியின் பிரச்னைக்கு தீர்வாக அமைந்தவர் ஷ்ரேயாஸ் ஐயர்.

ஒருநாள் அணியில் நான்காம் வரிசையில் சிறப்பாக ஆடி தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொண்டதுடன், அணியின் மிடில் ஆர்டருக்கு வலுவும் சேர்த்தார். 2017ல் யுவராஜ் சிங் ஓரங்கட்டப்பட்ட பின்னர், 2 ஆண்டுகள் தேடியும் 2019 உலக கோப்பைக்கு முன் நான்காம் வரிசை வீரரை தேர்வுக்குழுவால் கண்டறிய முடியவில்லை. 

மிடில் ஆர்டர் சொதப்பல், 2019 உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் வெளிப்பட்டது. அதன்விளைவாக அரையிறுதியில் தோற்று உலக கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பையும் இழந்தது இந்திய அணி. 

உலக கோப்பைக்கு பின்னர், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஷ்ரேயாஸ் ஐயர் நான்காம் வரிசையில் இறக்கிவிடப்பட்டார். ஆரம்பத்தில் மளமளவென விக்கெட்டுகள் சரிந்தால், மிடில் ஓவர்களில் சிங்கிள் ரொடேட் செய்து டீசண்ட்டான ஸ்கோரை அணியை எடுக்கவைக்கும் ஷ்ரேயாஸ் ஐயர், அணி நல்ல நிலையில் இருந்தால், கடைசி நேரத்தில் இறங்கினால் கூட, அடித்து ஆடி மளமளவென ஸ்கோர் செய்யும் திறன் படைத்தவர். 

vikram rathour clarifies about indian team middle order batting

சூழலுக்கு ஏற்றவாறு ஆடியதால், அணி நிர்வாகத்தின் நம்பிக்கையை பெற்று அணியில் தனக்கான இடத்தை நிரந்தரமாக பிடித்துவிட்டார் ஷ்ரேயாஸ் ஐயர். நான்காம் வரிசை செட் ஆனதுமே, எஞ்சிய பேட்டிங் ஆர்டர்களும் சிறப்பாக பூர்த்தி செய்யப்பட்டன. ஒருநாள் போட்டிகளில் ராகுல், ஷ்ரேயாஸூக்கு அடுத்து 5ம் இடத்தில் ஆடுகிறார். எனவே இந்திய மிடில் ஆர்டர் பேட்டிங்கில் இருந்த சிக்கல் தீர்ந்துவிட்டது.

இந்நிலையில், ஆங்கில ஸ்போர்ட்ஸ் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், ஷ்ரேயாஸ் ஐயர் குறித்து பேசியுள்ளார். ”பெரும் விவாதப்பொருளாக இருந்த நான்காம் வரிசைக்கு தேவையான நியாயத்தை போதுமான அளவிற்கு செய்துள்ள ஷ்ரேயாஸ் ஐயர், நான்காம் வரிசைக்கான தீர்வாக அமைந்துவிட்டார். டி20 கிரிக்கெட்டில் மனீஷ் பாண்டே வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அசத்துகிறார். ஒருநாள் போட்டிகளில் கேஎல் ராகுல் மிடில் ஆர்டரில் ஆடுகிறார். எனவே இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் சிறப்பாக இருக்கிறது. இதைத்தவிர புதிதாக வெளியே சென்று தேட வேண்டிய அவசியமில்லை என்று விக்ரம் ரத்தோர் உறுதியாக தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios