IPL 2023: ஓரே ஓவரில் ஆட்டத்தை முடித்துவிட்ட விஜய் சங்கர்..! KKR-ஐ வீழ்த்தி முதலிடத்திற்கு முன்னேறியது GT அணி

விஜய் சங்கரின் அதிரடி அரைசதத்தால், கேகேஆர் நிர்ணயித்த 180 ரன்கள் என்ற இலக்கை 18வது ஓவரிலேயே அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.
 

vijay shankar half century helps gujarat titans to beat kkr by  7 wickets and goes to first place in ipl 2023

ஐபிஎல் 16வது சீசனில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடந்த போட்டியில் கேகேஆர் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்த இந்த போட்டியி ல் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.   மழை பெய்ததால் ஆட்டம் சரியாக 3.30 மணிக்கு தொடங்காமல் தாமதமாக தொடங்கப்பட்டது. 

குஜராத் டைட்டன்ஸ் அணி:

ரிதிமான் சஹா, அபினவ் மனோகர், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, ரஷீத் கான், நூர் அகமது, முகமது ஷமி, மோஹித் சர்மா, ஜோஷுவா லிட்டில்.

கேகேஆர் அணி:

ரஹ்மானுல்லா குர்பாஸ், நாராயண் ஜெகதீசன், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா (கேப்டன்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், டேவிட் வீஸ், ஷர்துல் தாகூர், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி. 

IPL 2023: ஐபில்லில் தனித்துவமான, கஷ்டமான சாதனையை செய்த ரஷீத் கான்.! தோனி, கோலி மாதிரி பிளேயர்ஸே செய்யாத சாதனை

முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர் நாராயண் ஜெகதீசன் அதிரடியாக தொடங்கினார். ஆனால் கிடைத்த தொடக்கத்தை பெரிய இன்னிங்ஸாக மாற்றத்தவறிய அவர் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஷர்துல் தாகூர்(0), வெங்கடேஷ் ஐயர்(11), கேப்டன் நிதிஷ் ராணா(4) ஆகிய மூவரும் ஏமாற்றமளிக்க, ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று அடித்து ஆடிய தொடக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் அரைசதம் அடித்தார்.

ஆஃப்கான் வீரரான குர்பாஸ், அவரது சக வீரரான ரஷீத் கானின் பவுலிங்கை அடித்து நொறுக்கினார். 39 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 81 ரன்களை குவித்து, சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஆண்ட்ரே ரசல் 19 பந்தில் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் அடித்து ஃபினிஷிங் ரோலை செவ்வனே செய்தார். 20 ஓவரில் 179 ரன்கள் அடித்தது கேகேஆர் அணி.

180 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர் ரிதிமான் சஹா 10 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான ஷுப்மன் கில் அபாரமாக பேட்டிங் ஆடி 35 பந்தில் 49 ரன்கள் அடித்து ஒரு ரன்னில் அரைசதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். கேப்டன் ஹர்திக் பாண்டியா 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் விஜய் சங்கரும் டேவிட் மில்லரும் இணைந்து அதிரடியாக பேட்டிங் ஆடினர். 16 ஓவரில் குஜராத் அணி 142 ரன்கள் அடித்திருந்தது. வருண் சக்கரவர்த்தி வீசிய 17வது ஓவரில் விஜய் சங்கர் 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி விளாச, அந்த ஓவரில் 24 ரன்கள் கிடைத்தது. அடுத்த ஓவரிலும் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடித்து அரைசதம் எட்டிய விஜய் சங்கர், 18வது ஓவரிலேயே ஆட்டத்தை முடித்து கொடுத்தார். 24 பந்தில் 51 ரன்கள் அடித்து விஜய் சங்கர் கடைசிவரை களத்தில் நின்றார். டேவிட் மில்லர் 18 பந்தில் 32 ரன்கள் அடித்தார்.

IPL 2023: தோனி மாதிரியே கேப்டன்சி செய்து அசத்துகிறார் ஹர்திக் பாண்டியா..! அவரோட தனித்துவமே இதுதான் - கவாஸ்கர்

18வது ஓவரிலேயே இலக்கை அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி, புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios