இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 2வது போட்டி  சிட்னியில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஃபின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து களத்திற்கு வந்த ஆஸ்திரேலிய தொடக்க வீரர்கள் வார்னரும் ஃபின்ச்சும் இணைந்து, முதல் போட்டியை போலவே இந்த போட்டியிலும் அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். வார்னர் அதிரடியாக ஆடி அரைசதம் அடிக்க, அவரது பார்ட்னரும் கேப்டனுமான ஃபின்ச்சும் அவரைத்தொடர்ந்து அரைசதம் அடித்தார்.

முதல் விக்கெட்டுக்கு வார்னரும் ஃபின்ச்சும் இணைந்து 23 ஓவரில் 142 ரன்களை குவித்தனர். 22 ஓவர்களாக முதல் விக்கெட்டை கூட வீழ்த்த முடியாமல் இந்திய அணி திணறிய நிலையில் ஒருவழியாக 23வது ஓவரில் ஃபின்ச்சை 60 ரன்களில் வீழ்த்தினார் ஷமி. இதையடுத்து அதிரடியாக ஆடி 77 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 83 ரன்களை குவித்து சதத்தை நெருங்கிய வார்னரை ஷ்ரேயாஸ் ஐயர் ரன் அவுட்டாக்கி அனுப்பினார். அந்த வீடியோ இதோ..

இதையடுத்து ஸ்மித்தும் லபுஷேனும் ஜோடி சேர்ந்து அருமையாக ஆடிவருகின்றனர். கடந்த போட்டியில் சதமடித்த ஸ்மித், இந்த போட்டியிலும் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்த நிலையில், சதத்தை நோக்கி ஆடிவருகிறார்.