ரஞ்சி தொடரில் குஜராத் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி விதர்பா அணி வரலாற்று வெற்றியை பெற்று சாதனை படைத்துள்ளது. 

ரஞ்சி தொடரில் விதர்பா மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான போட்டி நாக்பூரில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய விதர்பா அணி வெறும் 74 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குஜராத் அணியில் கஜா மற்றும் தேஜாஸ் படேல் ஆகிய இருவரும் தலா 5 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய குஜராத் அணியின் தொடக்க வீரர் ஆர்யா தேசாய் அபாரமாக பேட்டிங் ஆடி 88 ரன்கள் அடித்து 12 ரன்னில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். மேராய் 40 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் சிறு சிறு பங்களிப்பு செய்ய, முதல் இன்னிங்ஸில் குஜராத் அணி 256 ரன்கள் அடித்தது. 

பந்து பேட்டிலும் படல; ஸ்டம்பிலும் படல.. பிறகு எப்படி அவுட்? கணவன் ஹர்திக் பாண்டியாவிற்காக பொங்கிய மனைவி நடாசா

182 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை ஆடிய விதர்பா அணியின் விக்கெட் கீப்பர் ஜித்தேஷ் ஷர்மா நன்றாக பேட்டிங் ஆடி 69 ரன்கள் அடித்தார். அதர்வா டைட் 44 ரன்களும், பின்வரிசையில் பூடே 42 ரன்களும் அடிக்க, 2வது இன்னிங்ஸில் 254 ரன்கள் அடித்தது விதர்பா அணி.

மொத்தமாக வெறும் 72 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்ற விதர்பா அணி, 73 ரன்கள் என்ற எளிய இலக்கை குஜராத் அணிக்கு நிர்ணயித்தது. ஆனால் அந்த எளிய இலக்கை அடிக்கமுடியமால் வெறும் 54 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ப்ரோ, நீதான் கேப்டன்.. என்கிட்ட கேட்குற பார்த்தியா..? மனசுல கவலையை வச்சுகிட்டு ரோஹித்திடம் கலகலத்த இஷான் கிஷன்

இது விதர்பா அணிக்கு சாதனை வெற்றி. ரஞ்சி டிராபி வரலாற்றில் கடைசி இன்னிங்ஸில் அடிக்கவிடாமல் கட்டுப்படுத்தப்பட்ட குறைவான இலக்கு இதுதான். குறைவான ஸ்கோரை அடிக்கவிடாமல் கடைசி இன்னிங்ஸில் எதிரணியை கட்டுப்படுத்தி விதர்பா அணி சாதனை வெற்றி பெற்றுள்ளது.