Asianet News TamilAsianet News Tamil

ப்ரோ, நீதான் கேப்டன்.. என்கிட்ட கேட்குற பார்த்தியா..? மனசுல கவலையை வச்சுகிட்டு ரோஹித்திடம் கலகலத்த இஷான் கிஷன்

ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்தும், அதற்கடுத்த 3 போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைக்காதது குறித்து ரோஹித் சர்மா கேட்க, அதற்கு ரொம்ப ஜாலியாக இஷான் கிஷன் உண்மையை கூறிய வீடியோ வைரலாகிவருகிறது. 
 

ishan kishan funny reply to captain rohit sharma about his absence even after scoring 200 in odi
Author
First Published Jan 19, 2023, 3:03 PM IST

ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் இரட்டை சதங்களை குவித்துவருகின்றனர். சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதத்தை விளாச, அதன்பின்னர் சேவாக் அடித்தார். அதற்கடுத்து 3 இரட்டை சதங்களை விளாசி அபார சாதனை படைத்தார் ரோஹித் சர்மா. ரோஹித் அடித்த 264 ரன்கள் தான், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

அதன்பின்னர் கடந்த 2 மாதங்களில் 2 இந்திய வீரர்கள் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதமடித்துள்ளனர். கடந்த ஆண்டு  இறுதியில் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இஷான் கிஷன் இரட்டை சதமடித்தார். 131 பந்தில் 210 ரன்களை குவித்து சாதனை படைத்தார் இஷான் கிஷன்.

இந்நிலையில், நேற்று நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஷுப்மன் கில்லும் இரட்டை சதமடித்து இந்த சாதனை பட்டியலில் இணைந்தார். அபாரமாக பேட்டிங் ஆடிய ஷுப்மன் கில் 149 பந்தில் 208 ரன்களை குவித்து சாதனை படைத்தார். கில்லின் இரட்டை சதத்தால் 50 ஓவரில் 349 ரன்களை குவித்த இந்திய அணி, நியூசிலாந்தை 337 ரன்களுக்கு கட்டுப்படுத்தி 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

IPL 2023: பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஸ்பின் பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் ஆர்சிபி வீரர் நியமனம்..!

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இரட்டை சதமடித்தும் கூட, இஷான் கிஷனுக்கு அதன்பின்னர் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் கேஎல் ராகுல் ஆடாததால் இஷான் கிஷனுக்கு ஒரு விக்கெட் கீப்பர் என்ற முறையில் ஆட வாய்ப்பு கிடைத்தது. அதுவும் மிடில் ஆர்டரில் 4ம் வரிசையில் தான் ஆட வாய்ப்பு கிடைத்தது.

அதற்கு காரணம், ஷுப்மன் கில் தொடக்க வீரராக ஆட கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்தி சிறப்பாக ஆடியதுதான். ஷுப்மன் கில் இலங்கைக்கு எதிரான தொடரில் அபாரமாக ஆடியதால் அவரையும் புறக்கணிக்க முடியாத சூழல் உருவானதால் அவரே நியூசிலாந்துக்கு எதிராகவும் ஓபனிங்கில் இறக்கப்பட்டார். இஷான் கிஷன் 4ம் வரிசையில் ஆடினார். தனக்கு மீண்டும் ஓபனிங்கில் ஆட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை இஷான் கிஷனுக்கு இருந்திருக்கும். ஆனால் அதற்கும், இரட்டை சதமடித்து ஆப்பு வைத்துவிட்டார் ஷுப்மன் கில். இனிமேல் ஷுப்மன் கில்லையும் புறக்கணிக்க முடியாது.

இப்படியொரு தர்ம சங்கடமான சூழலில் சிக்கியுள்ளார் இஷான் கிஷன். இந்நிலையில், நியூசி.,க்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கு பின், இந்திய அணியின் இரட்டை சத மன்னர்களான ரோஹித் சர்மா - இஷான் கிஷன் - ஷுப்மன் கில் ஆகிய மூவரும் கலந்துரையாடினர்.

சச்சின் டெண்டுல்கர் 100 சத சாதனையை முறியடிக்க கோலி என்ன செய்யணும்..? கவாஸ்கர் அதிரடி ஆலோசனை

அப்போது, இரட்டை சதமடித்தும் உனக்கு(இஷான் கிஷன்) அதன்பின்னர்  3 போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லையே..? என்று இஷான் கிஷனிடம் ரோஹித் சர்மா கேட்டார். அதற்கு, நீங்கதான் (ரோஹித்) கேப்டன் பிரதர் என்று இஷான் கிஷன் சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.

இரட்டை சதமடித்தும் அதன்பின்னர் தனக்கு இந்திய அணியில் அடுத்த 3 போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைக்காத தனது துரதிர்ஷ்டத்தை நினைத்து இஷான் கிஷன் வருத்தப்பட்டாலும், அதை மறைத்துக்கொண்டு ரோஹித்திடம், நீங்கதான் கேப்டன்.. என்னிடம் கேட்கிறீர்களே என்ற அர்த்தத்தில் ரோஹித்துக்கு சரியான பதிலளித்தார் இஷான் கிஷன்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios