Asianet News TamilAsianet News Tamil

விஜய் ஹசாரே அரையிறுதி: குஜராத்தை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறியது உத்தர பிரதேச அணி

விஜய் ஹசாரே தொடரின் அரையிறுதியில் குஜராத்தை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறியது உத்தர பிரதேச அணி.
 

uttar pradesh beat gujarat by 5 wickets and qualifies for vijay hazare trophy final
Author
Delhi, First Published Mar 11, 2021, 4:56 PM IST

உள்நாட்டு டி20 தொடரான விஜய் ஹசாரே தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இன்று அரையிறுதி போட்டிகள் நடந்துவருகின்றன. குஜராத் மற்றும் உத்தர பிரதேச அணிகள் ஒரு அரையிறுதி போட்டியில் மோதின.

டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணியில் ஹெட் படேலை தவிர வேறு யாருமே சரியாக ஆடாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஹெட் படேல் மட்டும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். ஆனால் அவரும் பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் 60 ரன்களில் ஆட்டமிழக்க, 48.1 ஓவரில் 184 ரன்களுக்கு சுருண்டது குஜராத் அணி.

185 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய உத்தர பிரதேச அணி இலக்கு எளிதானது என்பதால் 42வது ஓவரிலேயே இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. உத்தர பிரதேச அணியில் அக்‌ஷ்தீப் நாத் சிறப்பாக ஆடி 71 ரன்கள் அடித்து, ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்த வெற்றியின் மூலம் விஜய் ஹசாரே ஃபைனலுக்கு தகுதிபெற்றது உத்தர பிரதேச அணி. மற்றொரு அரையிறுதியில் கர்நாடகாவை மும்பை அணி வீழ்த்திவிட்டதால்,, வரும் 14ம் தேதி நடக்கும் இறுதி போட்டியில் மும்பையும் உத்தர பிரதேசமும் மோதுகின்றன.

Follow Us:
Download App:
  • android
  • ios