NZ vs IND: 2வது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்..! யார் யாருக்கு வாய்ப்பு..?
நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. இந்த தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோர் ஆடவில்லை. காயத்திலிருந்து இன்னும் மீளாத பும்ரா, ஜடேஜா ஆகியோரும் இந்த தொடரில் ஆடவில்லை.
ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியில் இந்த டி20 தொடரில் ஆடும் இந்திய அணியில் இளம் வீரர்கள் பலருக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஷுப்மன் கில், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், உம்ரான் மாலிக், வாஷிங்டன் சுந்தர் ஆகிய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
AUS vs ENG: 2வது ODI-யில் 72 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா
முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், 2வது டி20 போட்டி நாளை நடக்கிறது. இந்த போட்டிக்கான உத்தேச இந்திய அணியை பார்ப்போம்.
ஷுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக ஆடுவார்கள். 3ம் வரிசையில் சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரில் ஒருவர் ஆடுவார். 4, 5 மற்றும் 6ம் வரிசைகளில் முறையே சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் ஆடுவார்கள்.
ஸ்பின்னர்களாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் சாஹல் ஆகிய இருவரும், ஃபாஸ்ட் பவுலர்களாக ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் ஆகிய மூவரும் ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி தேர்வாளர்கள் அனைவரும் நீக்கம்..! பிசிசிஐ அதிரடி
உத்தேச இந்திய அணி:
ஷுப்மன் கில், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன்/ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்.