Asianet News TamilAsianet News Tamil

IND vs NZ முதல் டி20: ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்..!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

team india probable playing eleven for the first t20 against new zealand
Author
Jaipur, First Published Nov 17, 2021, 2:30 PM IST

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இன்று (17), 19, 21 ஆகிய நாட்களில் 3 டி20 போட்டிகளும், அதைத்தொடர்ந்து 2 டெஸ்ட் போட்டிகளும் நடக்கவுள்ளன.

முதல் டி20 போட்டி இன்று ஜெய்ப்பூரில் நடக்கிறது. இந்திய டி20 அணியின் முழுநேர கேப்டனாக ரோஹித் சர்மா பொறுப்பேற்ற பின், அவரது தலைமையில் இந்திய அணி ஆடும் முதல் போட்டி இது. தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பயிற்சியில், கேப்டன் ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்திய அணியின் முதல் தொடர் இது என்பதால், இந்த தொடர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த தொடர் அவர்களுக்கு மிக முக்கியமானது.

இந்த டி20 தொடரில் விராட் கோலி, பும்ரா, ஷமி, ஜடேஜா, ஹர்திக்  பாண்டியா, ஷர்துல் தாகூர் ஆகிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. எனவே இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

இதையும் படிங்க - 2024 முதல் 2031 வரையிலான சர்வதேச கிரிக்கெட் தொடர்களுக்கான அட்டவணையை வெளியிட்டது ஐசிசி..!

கோலி ஆடாததால் கேஎல் ராகுல் 3ம் வரிசையில் ஆடலாம். அதனால் ரோஹித்துடன் இஷான் கிஷன் தொடக்க வீரராக இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 4ம் வரிசையில் சூர்யகுமார் யாதவ், 5ம் வரிசையில் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் 6ம் வரிசையில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ஆடுவார். 

ஸ்பின்னர்களாக ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகிய இருவரும், ஃபாஸ்ட் பவுலர்களாக தீபக் சாஹர் மற்றும் முகமது சிராஜ் ஆகிய இருவரும் ஆடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 11வது வீரராக ஒரு ஸ்பின்னர் ஆடுவாரா அல்லது ஃபாஸ்ட் பவுலர் ஆடுவாரா என்பதை உறுதியாக கூறமுடியாது. எனவே அக்ஸர் படேல் - ஆவேஷ் கான் ஆகிய இருவரில் ஒருவர் ஆட வாய்ப்புள்ளது. 

இதையும் படிங்க - அக்தர் நீ சொல்றது தப்பு.. தொடர் நாயகன் விருது வார்னருக்கு வழங்கப்பட்டது தான் சரி! நியாயமா பேசிய வாசிம் அக்ரம்

இந்திய அணி 3 ஸ்பின்னர்கள் - 2 ஃபாஸ்ட் பவுலர்களுடன் ஆட விரும்பினால் அக்ஸர் படேலும், 2 ஸ்பின்னர்கள் - 3 ஃபாஸ்ட் பவுலர்களுடன் ஆட விரும்பினால் ஆவேஷ் கானும் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கலாம்.

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், கேஎல் ராகுல் (துணை கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், தீபக் சாஹர், அக்ஸர் படேல்/ஆவேஷ் கான், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios