இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான உத்தேச இந்திய அணியை பார்ப்போம். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 2வது டெஸ்ட் போட்டி நாளை சென்னையில் தொடங்குகிறது.

முதல் போட்டியில் தோற்ற இந்திய அணி, 2வது டெஸ்ட்டில் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது. இங்கிலாந்து அணியும் வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பில் உள்ளது. எனவே 2வது டெஸ்ட்டும் கடும் போட்டியாக இருக்கும்.

2வது டெஸ்ட்டுக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது. சீனியர் ஃபாஸ்ட் பவுலர் இஷாந்த் சர்மாவிற்கு பதிலாக ஆஸி.,யில் அசத்திய முகமது சிராஜ் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. அதேபோல் இடது கை ஸ்பின்னர் ஷபாஸ் நதீமிற்கு பதிலாக இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி(கேப்டன்), அஜிங்க்யா ரஹானே(துணை கேப்டன்), ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பும்ரா.