3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டிக்கான உத்தேச இந்திய அணியை பார்ப்போம்.
இந்திய ஆஸ்திரேலியா இடையேயான முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்று 2-0 என ஆஸ்திரேலிய அணி வென்றுவிட்ட நிலையில், கடைசி ஒருநாள் போட்டி கான்பெராவில் டிசம்பர் 2ம் தேதி(நாளை மறுநாள்) நடக்கவுள்ளது.
ஒருநாள் தொடரின் வெற்றி முடிவாகிவிட்டதால், கடைசி போட்டி இரு அணிகளுக்குமே முக்கியமான போட்டியல்ல. ஆனால் இந்திய அணி ஆறுதல் வெற்றியாவது பெற முயலும். ஏற்கனவே தொடரை இழந்துவிட்டதால், டெஸ்ட் தொடரில் ஆடும் ஃபாஸ்ட் பவுலர்களுக்கு இந்த போட்டியில் ஓய்வளிக்கப்பட்டு சில மாற்றங்கள் செய்யப்படலாம்.
நவ்தீப் சைனிக்கு பதிலாக இடது கை ஃபாஸ்ட் பவுலர் நடராஜனும், பும்ரா அல்லது ஷமி ஆகிய இருவரில் ஒருவருக்கு பதிலாக ஷர்துல் தாகூரும் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மயன்க் அகர்வாலுக்கு பதிலாக ஷுப்மன் கில், தவானுடன் தொடக்க வீரராக இறக்கப்படலாம்.
உத்தேச இந்திய அணி:
ஷிகர் தவான், மயன்க் அகர்வால்/ஷுப்மன் கில், விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல்(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, பும்ரா/ஷமி, நடராஜன், ஷர்துல் தாகூர், சாஹல்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 30, 2020, 7:14 PM IST