இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலிய அணி 2-0 என வென்ற நிலையில், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நாளை கான்பெராவில் நாளை நடக்கவுள்ளது.

இந்திய நேரப்படி பிற்பகல் 1.40 மணிக்கு போட்டி தொடங்கும். இந்த போட்டியில் களமிறங்கும் உத்தேச இந்திய அணியை பார்ப்போம். 

தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவரும் இறங்குவார்கள். கேப்டன் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் வழக்கம்போல 3 மற்றும் 4ம் வரிசைகளில் இறங்குவார்கள். மனீஷ் பாண்டே ஐந்தாம் வரிசையிலும், ஃபினிஷர்களாக ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜாவும் ஆடுவார்கள்.

ஸ்பின்னராக வாஷிங்டன் சுந்தரும், ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா, ஷமியுடன், தமிழகத்தை சேர்ந்த நடராஜனும் ஆடுவார்.

உத்தேச இந்திய அணி:

ஷிகர் தவான், கேஎல் ராகுல்(விக்கெட் கீப்பர்), விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், பும்ரா, ஷமி, டி.நடராஜன்.