வெவ்வேறு ஃபார்மட்டுக்கு வெவ்வேறு கேப்டன்கள்..! மௌனம் கலைத்த ராகுல் டிராவிட்

வெவ்வேறு ஃபார்மட்டுகளுக்கான இந்திய அணிக்கு வெவ்வேறு கேப்டன்களை நியமிப்பது குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியுள்ளார்.
 

team india head coach rahul dravid speaks on split captaincy

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என ஒருநாள் தொடரை வென்றது. கடைசி போட்டி நாளை இந்தூரில் நடக்கும் நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் டிராவிட், கேப்டன்சி பகிர்வு குறித்து பேசியுள்ளார்.

டி20 உலக கோப்பைக்கு பின் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய 2 சீனியர் வீரர்களும் டி20 கிரிக்கெட்டில் ஆடுவதில்லை. வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் ரோஹித் சர்மா ஆடாததால் ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட்டு அந்த தொடர்களை வென்று கொடுத்தார்.

பெரிய தவறு செய்தும் ஐசிசி தண்டனையிலிருந்து இஷான் கிஷன் தப்பியது எப்படி..?

டி20 கிரிக்கெட்டிலிருந்து சீனியர் வீரர்களை ஓரங்கட்டிவிட்டு, ஹர்திக் பாண்டியா கேப்டன்சியில் இளம் வீரர்களை கொண்ட அணியை கட்டமைத்து ஆக்ரோஷமான அணுகுமுறையுடன் 2024ம் ஆண்டு நடக்கும் டி20 உலக கோப்பைக்கு இந்திய அணி தயாராக வேண்டும் என்று வலியுறுத்தல்கள் வலுத்தன.

அதை உறுதி செய்யும்பொருட்டு, ரோஹித்தும் கோலியும் டி20 போட்டிகளில் ஆடுவதில்லை. நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியிலும் ரோஹித், கோலி இல்லை. எனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளுக்கான கேப்டனாக ரோஹித்தும், டி20 அணிக்கான கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் செயல்பட வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது.

BBL: பேட்டிங்கில் தெறிக்கவிடும் ஸ்டீவ் ஸ்மித்.. ஒரே பந்தில் 16 ரன்கள்..! வைரல் வீடியோ

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ராகுல் டிராவிட்டிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ராகுல் டிராவிட், இதுதொடர்பாக நீங்கள் தேர்வாளர்களிடம் கேட்க வேண்டும். இப்போதைக்கு அப்படியொரு திட்டமிருப்பதாக தெரியவில்லை என்று ராகுல் டிராவிட் தெரிவித்தார்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios