கிரிக்கெட்டில் எல்லா காலக்கட்டத்திலுமே தமிழ்நாட்டிலிருந்து தலைசிறந்த ஸ்பின்னர்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். லக்‌ஷ்மண் சிவராமகிருஷ்ணன், முரளி கார்த்திக், அஷ்வின் ஆகியோரின் வரிசையில் வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் ஆடிவருகிறார். 

சுந்தருக்கு அடுத்து முருகன் அஷ்வின், சாய் கிஷோர், மணிமாறன் சித்தார்த் என அடுத்தடுத்து ஸ்பின்னர்கள் வரிசைகட்டி அசத்துகின்றனர். சையத் முஷ்டாக் அலி தொடர் முழுதுமே சாய் கிஷோர் அருமையாக வீசி, எதிரணியின் விக்கெட்டுகளை சரித்து தமிழ்நாடு அணிக்கு வெற்றிகளை குவித்து கொடுத்துவருகிறார். 

சூப்பர் லீக் சுற்றில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி நடந்துவருகிறது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் ஆடியது. அந்த அணியை, சாய் கிஷோர் மற்றும் சித்தார்த்தின் அபாரமான சுழற்பந்துவீச்சின் விளைவாக வெறும் 94 ரன்களுக்கு சுருட்டிவிட்டது தமிழ்நாடு அணி. 

பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில், அபிஷேக் ஷர்மா ஆகிய இருவரையும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற்றினார் சாய் கிஷோர். இவர்கள் இருவர் தவிர கரன் கைலாவின் விக்கெட்டையும் சாய் கிஷோர் வீழ்த்தினார். மந்தீப் சிங், அன்மோல்ப்ரீத் சிங் மற்றும் ஹர்ப்ரீத் ப்ரார் ஆகிய மூவரையும் சித்தார்த் வீழ்த்தினார். 

சித்தார்த் மணிமாறன் எடுத்த விக்கெட்டுகளின் வீடியோ:

இருவருமே மிக துல்லியமாகவும் நேர்த்தியாகவும் நல்ல லைன் அண்ட் லெந்த்தில் அருமையாக டர்ன் செய்தனர். அவர்கள் இருவரது பவுலிங்கின் வீடியோவையும் பிசிசிஐ, வெப்சைட்டில் பதிவேற்றியுள்ளது. 

சாய் கிஷோர் எடுத்த விக்கெட்டுகளின் வீடியோ: