Asianet News TamilAsianet News Tamil

T20 World Cup அரையிறுதி போட்டி: இங்கிலாந்து vs நியூசிலாந்து பலப்பரீட்சை..! இங்கி., அணியில் ஒரு கட்டாய மாற்றம்

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை (T20 World Cup) அரையிறுதி போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

t20 world cup semi final england vs new zealand match preview
Author
Abu Dhabi - United Arab Emirates, First Published Nov 10, 2021, 2:38 PM IST

டி20 உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் டி20 உலக கோப்பை தொடரில் சூப்பர் 12 சுற்று முடிவடைந்த நிலையில், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின.

இன்று அபுதாபியில் நடக்கும் முதல் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. 2019 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் ஃபைனலில் மோதிய இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள், இந்த உலக கோப்பையின் அரையிறுதியில் மீண்டும் மோதுகின்றன.

t20 world cup semi final england vs new zealand match preview

இதையும் படிங்க - IPL 2022 சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன்; தோனிக்கு மாற்று வீரர் இவரா? சோஷியல் மீடியா மூலம் பரபரப்பை கிளப்பிய வீரர்

அந்த உலக கோப்பை ஃபைனலில் நூழிலையில் கோப்பையை இழந்த நியூசிலாந்து அணி, இந்த நாக் அவுட் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறி பதிலடி கொடுக்கும் முனைப்பில் உள்ளது. நியூசிலாந்து அணியின் பெரிய பலமே கேன் வில்லியம்சனின் கேப்டன்சியும், வீரர்களின் ஒருங்கிணைந்த பங்களிப்பும் தான்.

ஒவ்வொரு அணிக்கு எதிராகவும் சிறப்பான திட்டங்களுடன் செல்லும் நியூசிலாந்து அணி, இங்கிலாந்து அணியின் முக்கியமான வீரர்களுக்கு எதிராக பக்கா திட்டங்களுடன் தான் களமிறங்கும். இந்த இரு அணிகளும் இதுவரை 21 முறை டி20 கிரிக்கெட்டில் மோதியதில், 13 முறை இங்கிலாந்து அணியும், 7 முறை நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றிருக்கின்றன.

இதையும் படிங்க - நாட்டுக்காக ஆடுறத விட ஐபிஎல் தான் இவங்களுக்கு முக்கியமா போச்சு! பிசிசிஐ உடனே நடவடிக்கை எடுக்கணும் - கபில் தேவ்

அபுதாபியில் நடக்கும் இன்றைய போட்டியில் களமிறங்கும் நியூசிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. கடந்த போட்டிகளில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் அந்த அணி களமிறங்கும்.

t20 world cup semi final england vs new zealand match preview

உத்தேச நியூசிலாந்து அணி:

மார்டின் கப்டில், டேரைல் மிட்செல், கேன் வில்லியம்சன் (கேப்டன்), டெவான் கான்வே (விக்கெட் கீப்பர்), க்ளென் ஃபிலிப்ஸ், ஜிம்மி நீஷம், மிட்செல் சாண்ட்னெர், ஆடம் மில்னே, டிம் சௌதி, இஷ் சோதி, டிரெண்ட் போல்ட்.

இதையும் படிங்க - முடிந்தது கோலியின் சோலி.. டி20 கிரிக்கெட்டில் கோலியின் டாப் 5 கேப்டன்சி சொதப்பல்கள்

இங்கிலாந்து அணியின் அதிரடி தொடக்க வீரர் ஜேசன் ராய் காயத்தால் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். அதனால் அவருக்கு பதிலாக இன்றைய அரையிறுதி போட்டியில் ஜோஸ் பட்லருடன் ஜானி பேர்ஸ்டோ தொடக்க வீரராக இறங்குவார். ஜானி பேர்ஸ்டோ ஏற்கனவே இங்கிலாந்து அணியில் ஆடும் வீரர் தான். எனவே ராய்க்கு பதிலாக புதிய வீரராக மிடில் ஆர்டரை வலுப்படுத்தும் விதமாக சாம் பில்லிங்ஸ் ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச இங்கிலாந்து அணி:

ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), ஜானி பேர்ஸ்டோ, டேவிட் மலான், மொயின் அலி, ஒயின் மோர்கன் (கேப்டன்), சாம் பில்லிங்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டான், மார்க் உட், அடில் ரஷீத்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios