டி20 உலக கோப்பை: துரதிர்ஷ்ட ஆஃப்கானிஸ்தான்..! ஆஸ்திரேலியா - இங்கிலாந்து போட்டி மழையால் தாமதம்

மெல்பர்னில் மழை பெய்துவருவதால் டி20 உலக கோப்பையில் ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து இடையேயான போட்டி மழையால் ரத்தான நிலையில், ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான போட்டியும் தாமதமாகியுள்ளது.
 

t20 world cup ireland vs afghanistan match abandoned due to rain and australia vs  england match also delayed

டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், மழையால் சில போட்டிகள் ரத்தாவது சுவாரஸ்யத்தை குறைக்கிறது. தென்னப்பிரிக்கா - ஜிம்பாப்வே இடையேயான போட்டியில் தென்னாப்பிரிக்கா ஜெயித்திருக்க வேண்டியது. ஆனால் மழை காரணமாக புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.

அதன்பின்னர் ஆஃப்கானிஸ்தான் அணி ஆடவேண்டிய 2 போட்டிகள் ரத்தாகியுள்ளன. க்ரூப் 1-ல் இடம்பெற்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி ஒரு போட்டியில் மட்டுமே ஆடியது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஃப்கானிஸ்தான் தோல்வியடைந்த நிலையில், நியூசிலாந்து - ஆஃப்கானிஸ்தான் இடையேயான போட்டி மழையால் ரத்தானது.

பாகிஸ்தானை கடைசி பந்தில் வீழ்த்தி ஒரு ரன்னில் ஜிம்பாப்வே த்ரில் வெற்றி! T20 World Cup-ஐ விட்டு வெளியேறும் பாக்

இன்று மெல்பர்னில் மழை காரணமாக ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து இடையேயான போட்டியும் ரத்தானது. ஆஃப்கானிஸ்தான் அணிக்கு கிரிக்கெட் ஆடும் கொடுப்பனையே இல்லை. 2 போட்டிகள் ரத்தாகியுள்ளது.

அந்த போட்டிக்கு பின் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான போட்டியும் மெல்பர்னில் நடக்கவேண்டியது. இந்திய நேரப்படி பிற்பகல் ஒரு மணிக்கு டாஸ் போட்டு ஒன்றரை மணிக்கு தொடங்கியிருக்க வேண்டிய போட்டியும் மழையால் தாமதமாகியுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு அடுத்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போட்டி ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையேயான போட்டிதான்.

Asianet Exclusive: இஸ்தான்புலில் ஐபிஎல் ஏலமா..? யார் சொன்னது..? ஐபிஎல் சேர்மன் அருண் துமால் திட்டவட்ட மறுப்பு

இந்நிலையில், மழையால் இந்த ஆட்டம் தாமதமாகியுள்ளது. ஆனால் ரத்தாகாமல் போட்டி நடக்கவேண்டும் என்பதுதான் ரசிகர்களின் விருப்பம்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios