இன்னும் 47 நாட்களில் டி20 உலகக் கோப்பை – 8 இடங்கள் உறுதி; 7 இடங்கள் இன்னும் முடிவு இல்ல!
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்குகிறது. இதில், இந்திய அணியின் 7 வீரர்கள் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரைத் தொடர்ந்து டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் ஜூன் 1 ஆம் தேதி தொடங்குகிறது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்கதேசம், கனடா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நேபாள், நமீபியா, அயர்லாந்து, நெதர்லாந்து, உகாண்டா, ஸ்காட்லாந்து, பபுவா நியூ கினியா, ஓமன், ஆப்கானிஸ்தான் என்று மொத்தமாக 20 அணிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த தொடருக்கு இன்னும் 47 நாட்கள் உள்ள நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணி வீரர்கள் இந்த மாதம் இறுதியிலோ அல்லது அடுத்த மாத தொடக்கத்திலோ அறிவிக்கப்பட இருக்கின்றனர். டி20 தொடருக்கான ரேஸில் இளம் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில் இந்த தொடருக்கான 15 வீரர்களில் 8 வீரர்கள் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட இருக்கின்றனர்.
அதில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்ப்ரித் பும்ரா, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங் ஆகியோர் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டனர். இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை. இவர்களில் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தாத நிலையில் டி20 உலகக் கோப்பையில் இடம் பெறுவது கேள்விக்குறியாகியுள்ளது.
முகமது சிராஜ், அக்ஷர் படேல், யுஸ்வேந்திர சஹால், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ஷிவம் துபே, சஞ்சு சாம்சன், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. மேலும், மாயங்க் யாதவ், ஜித்தேஷ் சர்மா, திலக் வர்மா, மோகித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோரும் டி20 உலகக் கோப்பை ரேஸில் இடம் பெற்றுள்ளனர். முகமது ஷமி காயம் காரணமாக டி20 உலகக் கோப்பையில் இடம் பெறுவது கேள்விக்குறியாகியுள்ளது.