Asianet News TamilAsianet News Tamil

T20 World Cup: #AUSvsSL ஆஸ்திரேலிய அணியின் முக்கியமான வீரருக்கு காயம்..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

ஆஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

t20 world cup australia vs sri lanka match preview and probable playing eleven for both teams
Author
Dubai - United Arab Emirates, First Published Oct 28, 2021, 4:09 PM IST

டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. துபாயில் நடக்கும் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவும் இலங்கையும் மோதுகின்றன. இரு அணிகளுமே அவை ஆடிய முதல் போட்டியில் வெற்றியை பெற்று, அதே உத்வேகத்துடன் இந்த போட்டியில் மோதுகின்றன.

சூப்பர் 12 சுற்றில் ஆஸ்திரேலிய அணி முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவையும், இலங்கை அணி வங்கதேசத்தையும் வீழ்த்தி வெற்றி பெற்றன. க்ரூப் 1-ல் இடம்பெற்றுள்ள இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் முறையே புள்ளி  பட்டியலில் 2 மற்றும் 3ம் இடங்களில் உள்ளன. நெட் ரன்ரேட்டின் அடிப்படையில் இலங்கை அணி 2ம் இடத்தில் உள்ளது. ஆடிய 2 போட்டிகளிலும் வெற்றி  பெற்ற இங்கிலாந்து அணி இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

புள்ளி பட்டியலின் முடிவை தீர்மானிப்பதில் இன்றைய ஆஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி முக்கியத்துவம் வாய்ந்தது. 

ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் டி20 சர்வதேச போட்டிகளில் இதுவரை ஆடிய 16 போட்டிகளில் இரு அணிகளுமே தலா 8 வெற்றிகளை பெற்றுள்ளன. இந்த 2 அணிகளில் எந்த அணியும் எந்த அணியின் மீதும் ஆதிக்கம் செலுத்தவில்லை. ஆனால் டி20 உலக கோப்பையை பொறுத்தமட்டில் ஆஸ்திரேலிய அணி ஒரு வெற்றி கூடுதலாக பெற்றுள்ளது. டி20 உலக கோப்பைகளில் இந்த 2 அணிகளும் மோதிய 3 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி 2 முறையும், இலங்கை அணி ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளது.

2010ம் ஆண்டுக்கு பிறகு டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவும் இலங்கையும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதே இல்லை. 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்த முறை தான் டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவும் இலங்கையும் மோதுகின்றன.

இரு அணிகளுமே வெற்றியை எதிர்நோக்கி களமிறங்கும் நிலையில், இலங்கை அணிக்கு நல்ல விஷயமும், ஆஸ்திரேலிய அணிக்கு விரும்பத்தகாத விஷயமும் நடந்துள்ளன. வங்கதேசத்துக்கு எதிரான கடந்த போட்டியில் ஆடாத இலங்கை ஸ்பின்னர் தீக்‌ஷனா, முழு ஃபிட்னெஸுடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆட தயாராகிவிட்டார். இது இலங்கை அணிக்கு சிறப்பான விஷயம்.

இதையும் படிங்க - என்னை மன்னித்துவிடுங்கள்.. நான் செய்தது தவறுதான்.! நிறவெறி விவகாரத்தில் மண்டியிட்டு சரணடைந்த குயிண்டன் டி காக்

மஹேஷ் தீக்‌ஷனா ஆடும்பட்சத்தில் அவருக்கு பதிலாக கடந்த போட்டியில் ஆடிய பினுரா ஃபெர்னாண்டோ நீக்கப்படுவார். 

உத்தேச இலங்கை அணி:

குசால் பெரேரா(விக்கெட் கீப்பர்), பதும் நிசாங்கா, சாரித் அசலங்கா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ, பானுகா ராஜபக்சே, வனிந்து ஹசரங்கா, தசுன் ஷனாகா(கேப்டன்), சாமிகா கருணரத்னே, துஷ்மந்தா சமீரா, மஹேஷ் தீக்‌ஷனா, லஹிரு குமாரா.

ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டர் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் ஃபார்மில் இல்லாமல் தவித்துவருவது ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பாதிப்பாக அமைந்துள்ள நிலையில், நேற்று பயிற்சியின் போது நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர் மிட்செல் ஸ்டார்க் முழங்காலில் காயமடைந்தார். அதனால் பயிற்சிக்களத்தில் இருந்து வெளியேறிய ஸ்டார்க்கிற்கு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், இன்று இலங்கைக்கு எதிரான போட்டிக்கு முன்பாக மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டார்.

அவர் பயிற்சியில் ஈடுபட்டாலும், போட்டியில் ஆடுவதற்கான ஃபிட்னெஸுடன் இருக்கிறாரா என்று தெரியவில்லை. ஒருவேளை அவர் ஆடவில்லை என்றால், அது ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பாதிப்பாக அமையும். ஏனெனில் அவர் ஒருவர் தான் ஆஸ்திரேலிய அணியின் இடது கை ஃபாஸ்ட் பவுலர். அவரது இருப்பு, ஆஸ்திரேலிய அணி ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டிற்கு நல்ல வெரைட்டியை கொடுக்கும். ஒருவேளை அவர் ஆடவில்லை என்றால், அவருக்கு பதிலாக கேன் ரிச்சர்ட்ஸன் ஆடுவார்.

உத்தேச ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச்(கேப்டன்), மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட்(விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க்/கேன் ரிச்சர்ட்ஸன், ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios