வெறும் 15 ரன்னுக்கு ஆல்அவுட்; கிரிக்கெட் வரலாற்றில் குறைவான ஸ்கோர் அடித்து மோசமான சாதனையை படைத்த சிட்னி தண்டர்
பிக்பேஷ் லீக்கில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 15 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, கிரிக்கெட் வரலாற்றில் குறைவான ஸ்கோரை அடித்த அணி என்ற மோசமான சாதனையை படைத்தது சிட்னி தண்டர் அணி.
பிக்பேஷ் டி20 லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்துவருகிறது. சிட்னி தண்டர் - அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி சிட்னியில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி:
ஜாக் வெதரல்ட், மேத்யூ ஷார்ட், கிறிஸ் லின், ஆடம் ஹோஸ், காலின் டி கிராண்ட் ஹோம், தாமஸ் கெல்லி, ஹாரி நீல்சன் (விக்கெட் கீப்பர்), ரஷீத் கான், வெஸ் அகார், ஹென்ரி தார்ண்டன், பீட்டர் சிடில் (கேப்டன்).
BBL: ஹோபர்ட் ஹரிகேன்ஸ் பவுலிங்கை அடித்து நொறுக்கி ஜோ கிளார்க் சதம்..! மெல்பர்ன் ஸ்டார்ஸ் அபார வெற்றி
சிட்னி தண்டர் அணி:
அலெக்ஸ் ஹேல்ஸ், மேத்யூ கில்க்ஸ் (விக்கெட் கீப்பர்), ரைலீ ரூசோ, ஜேசன் சங்கா (கேப்டன்), டேனியல் சாம்ஸ், அலெக்ஸ் ரோஸ், ஆலிவர் டேவிஸ், கிறிஸ் க்ரீன், குரிந்தர் சந்து, ஃபஸல்ஹக் ஃபரூக்கி, பிரெண்டன் டாக்கெட்.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணியில் கிறிஸ் லின் அதிகபட்சமாக 36 ரன்கள் அடித்தார். 27 பந்தில் அவர் 36 ரன்கள் அடித்தார். பின்வரிசையில் காலின் டி கிராண்ட் ஹோம் 24 பந்தில் 33 ரன்கள் அடித்தார். அவர்கள் இருவரைத்தவிர மற்ற அனைவருமே மிக சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 20 ஓவரில் 139 ரன்கள் மட்டுமே அடித்தது.
140 ரன்கள் என்பது எளிதான இலக்குதான். ஆனால் இந்த இலக்கை விரட்டிய சிட்னி தண்டர் அணி ஒவ்வொரு ஓவரிலும் விக்கெட்டை இழந்து, வெறும் 5.5 ஓவரில் 15 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சியளித்தது. அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிட்னி தண்டர் அணியின் 5 வீரர்கள் டக் அவுட்டாகினர். ஒரு வீரர் கூட இரட்டை இலக்க ரன் அடிக்கவில்லை.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அனில் கும்ப்ளே, அஷ்வின் சாதனையை முறியடித்த குல்தீப் யாதவ்
டி20 கிரிக்கெட்டில் மட்டுமல்லாது, கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு அணி அடித்த குறைந்தபட்ச ஸ்கோர் இதுதான். துருக்கி அணி அடித்த 21 ரன்கள் தான் குறைவான ஸ்கோராக இருந்தது. அதைவிட 6 ரன்கள் குறைவாக அடித்து மோசமான சாதனையை படைத்துள்ளது சிட்னி தண்டர் அணி.