Asianet News TamilAsianet News Tamil

தம்பி இது டெஸ்ட் போட்டி, டி20 இல்ல - காட்டு காட்டுன்னு காட்டிய சூர்யகுமார் யாதவ்!

ஹைதராபாத் அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி தொடரில் மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ் 74 பந்துகளில் 14 பவுண்டரிகள் ஒரு சிக்சர் என்று மொத்தம் 84 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.

Suryakumar Yadav Plays all match as a t20 format and he scored 84 runs in Ranji trophy against Hyderabad
Author
First Published Dec 20, 2022, 1:22 PM IST

மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ரஞ்சி டிராபி போட்டி இன்று காலை 9.30 மணிக்கு மும்பையின் பாந்த்ரா குர்லா காம்ப்ளெக்ஸில் தொடங்கியது. 

ஹைதராபாத்: தன்வே அகர்வால் (கேப்டன்), அக்‌ஷத் ரெட்டி, ரோகித் ராயுடு, தனய் தியாகராஜன், தெலுகுபல்லி ரவி தேஜா, மைக்கில் ஜெய்ஷ்வால், ப்ரதீக் ரெட்டி (விக்கெட் கீப்பர்), ராகுல் புத்தி, மெஹ்ட்ரா ஷஷாங்க், சிண்ட்லா ரக்‌ஷன் ரெட்டி, கார்த்திகேயா கக்

மும்பை: பிருத்வி ஷா, யாசஷ்வி ஜெய்ஷ்வால், அஜின்க்யா ரகானே (கேப்டன்) சூர்யகுமார் யாதவ், சர்ப்ராஷ் கான், ஹர்திக் தாமோர் (விக்கெட் கீப்பர்), ஷாம்ஸ் முலானி, தனுஷ் கொடியன், துஷார் தேஷ்பாண்டே, சித்தார்த் ராட், மோஹித் அவஸ்தி

புதிய வரலாற்று சாதனை படைத்த 18 வயதே நிரம்பிய ரெஹான் அகமது!

இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி பிருத்வி ஷா மற்றும் யாசஷ்வி ஜெய்ஷ்வால் ஆகியோர் மும்பை அணியின் முதல் இன்னிங்ஸை தொடங்கினர். ஆனால், பிருத்வி ஷா 19 ரன்களில் காரத்திகேயா கக் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன் பிறகு வண்டஹ் சூர்யகுமார் யாதவ், ஜெய்ஷ்வால் உடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தொடக்கம் முதலே  ரன்கள் குவிப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

யார் இந்த அண்டோனெல்லா ரோக்குஷோ? லியோனல் மெஸ்ஸியின் மனைவியைப் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டியவை ஏராளம்!

இருவரும் டெஸ்ட் போட்டி போன்றே விளையாடவில்லை. மாறாக டி20 தொடர் போன்றே விளையாடி வருகின்றனர். ஜெய்ஷ்வால் 91 பந்துகளில் 10 பவுண்டரிகள், ஒரு சிக்சர் உள்பட 60 ரன்கள் சேர்த்தார். இதே போன்று மிஸ்டர் 360 டிகிரி என்று அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் 74 பந்துகளில் ஒரு சிக்சர் மற்றும் 14 பவுண்டரிகள் உள்பட 84 ரன்கள் சேர்த்துள்ளார். உணவு இடைவேளையின் போது மும்பை அணி 31 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் சேர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Viral : முடிவுக்கு வந்த ஃபிஃபா உலக்கோப்பை! மெஸ்ஸி கட்டவுட் இறக்கம்!

Follow Us:
Download App:
  • android
  • ios