Asianet News TamilAsianet News Tamil

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் படைத்த 2 மாபெரும் சாதனைகள்

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவ் அபாரமான சாதனைகளை படைத்துள்ளார்.
 

suryakumar yadav has done 2 records in t20i after hitting half century against south africa in second match
Author
First Published Oct 3, 2022, 3:05 PM IST

டி20 உலக கோப்பை நெருங்கும் நிலையில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகிவருகிறது. ஜடேஜா, பும்ரா டி20 உலக கோப்பையில் ஆடாதது இந்திய அணிக்கு பின்னடைவாக அமையும் நிலையில், சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல், விராட் கோலி ஆகியோர் செம ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு பெரும் பலம்.

குறிப்பாக சூர்யகுமார் யாதவ் மிகச்சிறந்த ஃபார்மில், அபாரமான டச்சில் இருக்கிறார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி டி20, தென்னாப்பிரிக்கவுக்கு எதிரான முதலிரண்டு போட்டிகள் என தொடர்ச்சியாக 3 அரைசதங்களை அடித்து மிரட்டியுள்ளார் சூர்யகுமார் யாதவ். ஆடும் போட்டிகளில் எல்லாம் அரைசதம் அடித்து அசத்துகிறார் சூர்யகுமார்.

இதையும் படிங்க - பும்ராவிற்கு நிகரான மாற்றுவீரர் இந்தியாவில் மட்டுமல்ல; உலகத்துலயே இல்ல! இந்திய அணிக்கு பேரிழப்பு- ஷேன் வாட்சன்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடி 18 பந்தில் அரைசதம் அடித்த சூர்யகுமார் யாதவ், 22 பந்தில் 61 ரன்களை குவித்தார். இந்த போட்டியில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 1000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். 

இந்த அரைசதத்தின் மூலம் சூர்யகுமார் யாதவ் 2 அபாரமான சாதனைகளை படைத்துள்ளார். அவற்றை பார்ப்போம்.

1. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 573 பந்துகளில் சூர்யகுமார் யாதவ் 1000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் குறைவான பந்துகளில் 1000 ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் க்ளென் மேக்ஸ்வெல் 604 பந்துகளில் 1000 ரன்களை அடித்திருந்தார். அதுதான் சாதனையாக இருந்தது. அந்த சாதனையை முறியடித்துள்ளார் சூர்யகுமார் யாதவ்.

இதையும் படிங்க - புவனேஷ்வர் குமாரை விட அவர் பன்மடங்கு சிறந்த பவுலர்..! T20 WC-ல் அவரை ஆடவைங்க.. டேனிஷ் கனேரியா அட்வைஸ்

2. அதேபோல சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்த 2வது இந்திய வீரர் என்ற சாதனையை கேஎல் ராகுலுடன் பகிர்ந்துள்ளார் சூர்யகுமார் யாதவ். யுவராஜ் சிங் 2007ல் இங்கிலாந்துக்கு எதிராக 12 பந்தில் அரைசதம் அடித்தார். அதுதான் இந்திய வீரர் அடித்த அதிவேக அரைசதம். கேஎல் ராகுல் கடந்த ஆண்டு ஸ்காட்லாந்துக்கு எதிராக 18 பந்தில் அரைசதம் அடித்தார். நேற்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் யாதவும் 18 பந்தில் அரைசதம் அடித்து 2வது இடத்தை கேஎல் ராகுலுடன் பகிர்ந்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios