NZ vs IND: சூர்யகுமார் யாதவ் காட்டடி சதம்.. 2வது டி20யில் நியூசிலாந்துக்கு கடின இலக்கை நிர்ணயித்தது இந்தியா
நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, சூர்யகுமார் யாதவின் காட்டடி சதத்தால் 20 ஓவரில் 191 ரன்களை குவித்து, 192 ரன்கள் என்ற கடின இலக்கை நியூசிலாந்துக்கு நிர்ணயித்துள்ளது.
இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. 2வது டி20 போட்டி இன்று நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
இந்திய அணி:
இஷான் கிஷன், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.
நியூசிலாந்து அணி:
ஃபின் ஆலன், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன் (கேப்டன்), க்ளென் ஃபிலிப்ஸ், டேரைல் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சாண்ட்னெர், இஷ் சோதி, டிம் சௌதி, ஆடம் மில்னே, லாக்கி ஃபெர்குசன்.
முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷனும் ரிஷப் பண்ட்டும் களமிறங்கினர். ரிஷப் பண்ட் 13 பந்தில் வெறும் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்து மீண்டுமொரு முறை ஏமாற்றமளித்தார். இஷான் கிஷன் 31 பந்தில் 36 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஷ்ரேயாஸ் ஐயர் (13), ஹர்திக் பாண்டியா(13) ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
ராகுல் டிராவிட்டை விமர்சித்த ரவி சாஸ்திரிக்கு அஷ்வின் பதிலடி
ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் நிலைத்து நின்று அடித்து ஆடிய சூர்யகுமார் யாதவ், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 2வது சதத்தை பதிவு செய்தார். தனி ஒருவனாக நின்று நியூசிலாந்து பவுலிங்கை அடித்து நொறுக்கிய சூர்யகுமார் யாதவ் 51 பந்தில் 11 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 111 ரன்களை குவிக்க, 20 ஓவரில் 191 ரன்களை குவித்த இந்திய அணி, 192 ரன்கள் என்ற கடின இலக்கை நீயூசிலாந்துக்கு நிர்ணயித்துள்ளது.