இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு முன்னதாக சூர்யகிரண் ஏரோபாட்டிக் குழுவின் சார்பில் சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த அந்த நாள் இன்று. எப்படியாவது இந்திய அணி டிராபியை கைப்பற்றிவிடாதா என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்கள் எத்தனையோ பேர். அவர்களுக்கான நாளாக இன்றைய நாள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பவுலிங் தேர்வு செய்தார். இரு அணிகளும் எந்த மாற்றங்களும் செயய்ப்படவில்லை.
இதுவரையில் இந்திய அணி விளையாடிய 10 போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த நிலையில் தான் முதல் முறையாக விமானப்படையினரின் சாகச நிகழ்ச்சி இன்று நடத்தப்பட்டுள்ளது. சூர்யகிரண் ஏரோபாட்டிக் குழு தான் இந்திய விமானப்படையின் இந்த சாகசத்தை நிகழ்த்தியுள்ளது. கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் வரையில் இந்த சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. வானில் பறந்தபடி, தலைகீழாக பல்டி அடித்தும் இந்த சாகசத்தை செய்து காட்டியுள்ளனர்.
இதனைப் பார்த்த கிரிக்கெட் வர்ணனையாளர்கள் தங்களது மொபையில் வீடியோ எடுத்துக் கொண்டுள்ளனர். மேலும், இந்த சாகச காட்சியை வியந்து பார்த்துள்ளனர்.
