IPL 2024, RCB: ஐபிஎல் 17 ஆவது சீசன் டிராபியை ஆர்சிபி வெல்ல வேண்டும் – சுரேஷ் ரெய்னா விருப்பம்!
2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் டிராபியை ஆர்சிபி கைப்பற்ற வேண்டும் என்று சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி சேன்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.
ஐபிஎல் அட்டவணை வெளியானதிலிருந்து ஒவ்வொரு அணியும் தீவிரமாக இறங்கி அதற்கான வேலைகளை செய்து வருகின்றன. இந்த நிலையில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான டிராபியை ஆர்சிபி கைப்பற்ற வேண்டும் என்று தான் விரும்புவதாக கூறியுள்ளார்.
இதுவரையில் ஒரு சீசன் கூட ஆர்சிபி டிராபியை கைப்பற்றியதே இல்லை. கடந்த 2009, 2011, 2016 ஆம் ஆண்டுகளில் மட்டுமே ஆர்சிபி இறுதி போட்டி வரை சென்று டெக்கான் சார்ஜஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளிடம் தோல்வி அடைந்தது. ஒவ்வொரு முறையும் டிராபியை கைப்பற்ற கடுமையாக ஆர்சிபி போராடி வருகிறது. சிஎஸ்கே கடந்த முறை டிராபியை வென்ற நிலையில், இந்த முறை ஆர்சிபி டிராபியை வெல்ல வேண்டும்.