ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.

புனேவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நிறைந்திருக்கும் நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக இறங்குகின்றனர். 3ம் வரிசையில் தேவ்தத் படிக்கல்லும், 4ம் வரிசையில் சஞ்சு சாம்சனும் இறங்குகின்றனர். 5ம் வரிசையில் ஷிம்ரான் ஹெட்மயரும், 6ம் வரிசையில் ரியான் பராக்கும் ஆடுகின்றனர். ஸ்பின்னர்களாக அஷ்வின் மற்றும் சாஹல் ஆகிய இருவரும் ஃபாஸ்ட் பவுலர்களாக பிரசித் கிருஷ்ணா, டிரெண்ட் போல்ட் மற்றும் நேதன் குல்ட்டர்நைல் ஆகிய மூவரும் ஆடுகின்றனர். 

ராஜஸ்தான் அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே நல்ல வலுவான அணியாக இருக்கிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன்,விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், நேதன் குல்ட்டர்நைல், யுஸ்வேந்திர சாஹல், டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

ராகுல் திரிபாதி, அபிஷேக் ஷர்மா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), நிகோலஸ் பூரன், எய்டன் மார்க்ரம், அப்துல் சமாத், வாஷிங்டன் சுந்தர், ரொமாரியோ ஷெஃபெர்டு, புவனேஷ்வர் குமார், டி.நடராஜன், உம்ரான் மாலிக்.