IPL 2023: விவ்ராந்த் சர்மா, மயன்க் அகர்வால் அதிரடி அரைசதம்..! MI-க்கு கடின இலக்கை நிர்ணயித்தது SRH

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 20 ஓவரில் 200 ரன்களை குவித்து 201 ரன்கள் என்ற கடின இலக்கை மும்பை இந்தியன்ஸுக்கு நிர்ணயித்தது. 
 

sunrisers hyderabad set tough target to mumbai indians in ipl 2023

ஐபிஎல் 16வது சீசன் லிக் சுற்று போட்டிகள் இன்று முடிகின்றன. குஜராத் டைட்டன்ஸ், சிஎஸ்கே, லக்னோ அணிகள் பிளே ஆஃபிற்கு முன்னேறிவிட்ட நிலையில், கடைசி இடத்திற்கு மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. 

மும்பை மற்றும் ஆர்சிபி ஆகிய 2 அணிகளும் அவற்றின் கடைசி லீக் போட்டிகளை இன்று ஆடுகின்றன. இரவு நடக்கும் போட்டியில் ஆர்சிபி அணி குஜராத் டைட்டன்ஸை எதிர்கொள்கிறது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடந்துவரும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ஆடிவருகின்றன.

பிளே ஆஃபிற்கு முன்னேற வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். 

மும்பை இந்தியன்ஸ் அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், கேமரூன் க்ரின், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், நெஹல் வதேரா, கிறிஸ் ஜோர்டான், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரண்டார்ஃப், குமார் கார்த்திகேயா, ஆகாஷ் மத்வால். 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

மயன்க் அகர்வால், விவ்ராந்த் சர்மா, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசன், ஹாரி ப்ருக், நிதிஷ் ரெட்டி, க்ளென் ஃபிலிப்ஸ், சன்வீர் சிங், மயன்க் தாகர், புவனேஷ்வர் குமார், உம்ரான் ம்ராலிக்.

முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக இறங்கிய மயன்க் அகர்வால் மற்றும் விவ்ராந்த் சர்மா ஆகிய இருவரும் இணைந்து அதிரடியாக ஆடி இருவருமே அரைசதம் அடித்து முதல் விக்கெட்டுக்கு 14 ஓவரில் 140 ரன்களை குவித்தனர். விவ்ராந்த் சர்மா 47 பந்தில் 69 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். 46 பந்தில் 83 ரன்களை குவித்த மயன்க் அகர்வால் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஃபிலிப்ஸ்(1), ஹாரி ப்ரூக்(0) ஆகியோர் ஏமாற்றமளித்ததால் டெத் ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி ஸ்கோர் செய்யவில்லை.

ஆனாலும் மயன்க் அகர்வால் - விவ்ராந்த் சர்மா அமைத்து கொடுத்த அபாரமான தொடக்கத்தால் 20 ஓவரில் 200 ரன்களை குவித்த சன்ரைசர்ஸ் அணி, 201 ரன்கள் என்ற கடின இலக்கை மும்பை இந்தியன்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios